Newsஜனாதிபதி மாளிகை பணத்துக்காக மிரட்டல் விடுத்த சர்ச்சைக்குரிய உயரதிகாரி

ஜனாதிபதி மாளிகை பணத்துக்காக மிரட்டல் விடுத்த சர்ச்சைக்குரிய உயரதிகாரி

-

ஜனாதிபதி மாளிகையில் கைப்பற்றிய பணத்தை, அண்மைக்காலமாக சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் காவல்துறை உயரதிகாரி ஒருவர் காவல்துறை அமைச்சரிடம் ஒப்படைக்குமாறு மிரட்டியுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அரச தலைவர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் பிரவேசித்ததையடுத்து, கோட்டாபய ராஜபக்ச தங்கியிருந்ததாகக் கூறப்படும் அறையின் அலுமாரியில் இருந்து ஒரு கோடியே எழுபத்து எட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவை பல்கலைக்கழக மாணவர்கள் குழு ஒன்று கண்டெடுத்தது.

அந்தப் பணத்தை அரச தலைவர் மாளிகையின் பாதுகாப்புப் பணியில் இருந்த சிறப்பு அதிரடிப்படையின் மூத்த காவல்துறை அத்தியட்சகர் நிசேத பெர்னாண்டோ என்ற அதிகாரியிடம் ஒப்படைக்க பல்கலைக்கழக மாணவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அங்கு அவர் அந்தத் தொகையை ஏற்க மறுத்ததுடன், தலைமை காவல்துறை பரிசோதகர் சாகர லியனகேவுக்கு அறிவித்தனைத் தொடர்ந்து, சாகர லியனகே உள்ளிட்ட காவல்துறை குழுவினர் அங்கு சென்றனர். பணம் கிடைத்த இடத்தை காணொலியாக பதிவு செய்த காவல்துறையினர், ஐந்து மாணவர்களிடம் வாக்குமூலங்களை பெற்று பணத்தையும் தமது பொறுப்பில் எடுத்துச் சென்றனர்.

இந்த பணம் தொடர்பான உண்மைகளை நீதிமன்றத்தில் தெரிவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இத்தனை நாட்களாக சர்ச்சையை ஏற்படுத்தி வரும் காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் திடீரென கோட்டை காவல் நிலைய பொறுப்பதிகாரியை அழைத்து, காவல்துறை புத்தகத்தில் பதியாமல் அந்தப் பணத்தை காவல்துறைக்கு பொறுப்பான அமைச்சரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

அதனை கோட்டை காவல்துறை பொறுப்பதிகாரி மறுத்ததாகவும் காவல்துறை உயரதிகாரியான “நான் சொன்னதைச் செய்” என்று அவரை மிரட்டியுள்ளதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த உயர் அதிகாரி அவ்வாறு உரையாடி மிரட்டியுள்ளதாக காவல்துறை குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளதுடன், காவல்துறை தலைமையகத்திற்கும் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை மா அதிபருடன் கலந்தாலோசிக்காமல் வெளியாட்கள் எவருக்கும் பணத்தை வழங்க வேண்டாம் என்று காவல்துறை தலைமையகத்தில் இருந்து கோட்டை காவல்துறை பொறுப்பதிகாரிக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

அமெரிக்காவின் தேசிய பறவையாக வெண்தலைக் கழுகு தேர்வு

அமெரிக்காவின் தேசியப் பறவையாக வெண்தலைக் கழுகை அதிகாரபூா்வமாக அறிவிக்கும் மசோதாவில் ஜனாதிபதி ஜோ பைடன் கையொப்பமிட்டு உறுதி செய்தாா். வெண்தலைக் கழுகுகள் அறிவியல் ரீதியாக “ஹாலியேட்டஸ் லுகோசெபாலஸ்”...

முதல் முறையாக வெளிநாடு செல்லும் காதலர்களுக்கான அறிவுரை

மனைவியுடன் முதல்முறையாக வெளிநாட்டுப் பயணத்தைத் திட்டமிடுபவர்களுக்கு புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் தொடர் வழிகாட்டிகளை 'சிஎன் டிராவலர்' வெளியிட்டுள்ளது என்பதும் சிறப்பு. அதன்படி, அவர்கள் தங்களது முதல் வெளிநாட்டுப்...

விக்டோரியாவில் உள்ள நீரில் கண்டறியப்பட்டுள்ள ஒரு அசாதாரண வைரஸ்

விக்டோரியாவில், எங்கள் நீரில் ஒரு அசாதாரண வைரஸ் போக்கு ஏற்பட்டதை அடுத்து, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் நடத்தப்பட்ட வழக்கமான கழிவுநீர் மாதிரி சோதனையின் போது இது...

பளு தூக்குதல் போட்டியில் கலந்துகொண்ட 90 வயது பெண்

தைவானின் தைபே நகரில் நடைபெற்ற 70 வயதுக்கு மேற்பட்ட பளுதூக்கும் போட்டியில் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட 90 வயது மூதாட்டி பங்கேற்றுள்ளார். மூன்று சுற்று போட்டியின் போது,...

பளு தூக்குதல் போட்டியில் கலந்துகொண்ட 90 வயது பெண்

தைவானின் தைபே நகரில் நடைபெற்ற 70 வயதுக்கு மேற்பட்ட பளுதூக்கும் போட்டியில் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட 90 வயது மூதாட்டி பங்கேற்றுள்ளார். மூன்று சுற்று போட்டியின் போது,...

சாதனை படைத்தது MCG-யின் முதல் நாள் வசூல்

மெல்பேர்ண் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) 26ம் திகதி தொடங்கிய Boxing Day டெஸ்ட் போட்டியை காண ஏராளமான பார்வையாளர்கள் குவிந்துள்ளனர். அதன்படி, முதல் நாளில் Boxing Day...