Newsஜனாதிபதி மாளிகை பணத்துக்காக மிரட்டல் விடுத்த சர்ச்சைக்குரிய உயரதிகாரி

ஜனாதிபதி மாளிகை பணத்துக்காக மிரட்டல் விடுத்த சர்ச்சைக்குரிய உயரதிகாரி

-

ஜனாதிபதி மாளிகையில் கைப்பற்றிய பணத்தை, அண்மைக்காலமாக சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் காவல்துறை உயரதிகாரி ஒருவர் காவல்துறை அமைச்சரிடம் ஒப்படைக்குமாறு மிரட்டியுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அரச தலைவர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் பிரவேசித்ததையடுத்து, கோட்டாபய ராஜபக்ச தங்கியிருந்ததாகக் கூறப்படும் அறையின் அலுமாரியில் இருந்து ஒரு கோடியே எழுபத்து எட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவை பல்கலைக்கழக மாணவர்கள் குழு ஒன்று கண்டெடுத்தது.

அந்தப் பணத்தை அரச தலைவர் மாளிகையின் பாதுகாப்புப் பணியில் இருந்த சிறப்பு அதிரடிப்படையின் மூத்த காவல்துறை அத்தியட்சகர் நிசேத பெர்னாண்டோ என்ற அதிகாரியிடம் ஒப்படைக்க பல்கலைக்கழக மாணவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அங்கு அவர் அந்தத் தொகையை ஏற்க மறுத்ததுடன், தலைமை காவல்துறை பரிசோதகர் சாகர லியனகேவுக்கு அறிவித்தனைத் தொடர்ந்து, சாகர லியனகே உள்ளிட்ட காவல்துறை குழுவினர் அங்கு சென்றனர். பணம் கிடைத்த இடத்தை காணொலியாக பதிவு செய்த காவல்துறையினர், ஐந்து மாணவர்களிடம் வாக்குமூலங்களை பெற்று பணத்தையும் தமது பொறுப்பில் எடுத்துச் சென்றனர்.

இந்த பணம் தொடர்பான உண்மைகளை நீதிமன்றத்தில் தெரிவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இத்தனை நாட்களாக சர்ச்சையை ஏற்படுத்தி வரும் காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் திடீரென கோட்டை காவல் நிலைய பொறுப்பதிகாரியை அழைத்து, காவல்துறை புத்தகத்தில் பதியாமல் அந்தப் பணத்தை காவல்துறைக்கு பொறுப்பான அமைச்சரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

அதனை கோட்டை காவல்துறை பொறுப்பதிகாரி மறுத்ததாகவும் காவல்துறை உயரதிகாரியான “நான் சொன்னதைச் செய்” என்று அவரை மிரட்டியுள்ளதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த உயர் அதிகாரி அவ்வாறு உரையாடி மிரட்டியுள்ளதாக காவல்துறை குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளதுடன், காவல்துறை தலைமையகத்திற்கும் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை மா அதிபருடன் கலந்தாலோசிக்காமல் வெளியாட்கள் எவருக்கும் பணத்தை வழங்க வேண்டாம் என்று காவல்துறை தலைமையகத்தில் இருந்து கோட்டை காவல்துறை பொறுப்பதிகாரிக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...