அரச தலைவர், பிரதமர் பதவிகளில் இருந்து விலகிய பின்னர் எதிர்க்கட்சித் தலைவரை மாற்று பிரதமராக நியமிப்பது ஏன் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன விளக்கம் அளித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் கூறியதாவது:
நாடாளுமன்ற மரபுப்படி எதிர்க்கட்சித் தலைவரே மாற்றுப் பிரதமராக வர வேண்டும்.
எனவே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் புதிய அரசாங்கத்தை அமைத்து மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண எதிர்பார்க்கின்றோம்.
தற்போதைய நெருக்கடியை நாடாளுமன்றத்தின் மூலம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். நாட்டில் அராஜகம் ஏற்பட்டால், ஆப்கானிஸ்தான் சூடான், துனிசியா போன்று மாறும் என்றார் அவர்.