கிரீன் டீ கொரோனா வைரஸை கட்டுப்படுத்துமா..? ஆய்வு சொல்லும் முடிவுகள்

0
361

கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், எந்த பானத்தால் கொரோனா வைரஸ் அறிகுறிகளை குறைக்க முடியும் என்பதில் மக்கள் ஆர்வமாக உள்ளனர். SARs-CoV-2 வைரஸ் மக்களிடையே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது பல வகைகளில் உருமாறி வருவது மக்களை பீதியடைய செய்துள்ளது.

  1. கிரீன் டீ-ல் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது, கொரோனாவை குணப்படுத்துவது அதில் ஒன்றா? நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்க்கும், நோய்த்தொற்றுகளிலிருந்து மீண்டு வருவது முதல் உடல் எடையை பராமரித்தல் வரை கிரீன் டீ அருந்துவது பல வகைகளில் நன்மை அளிக்கும் என கூறப்பட்டு வருகிறது.
  2. கிரீன் டீ மற்றும் நோய் எதிர்ப்பு ஆரோக்கியம் இதிலுள்ள ஆன்டி ஆக்சிடென்ட், ஆன்டிவைரல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி போன்ற குணங்கள் தொற்றுக்களையும் பல்வேறு நோய்களை உண்டாக்கும் காரணிகளையும் அழிக்க உதவுகிறது. கிரீன் டீயில் zinc, selenium, copper, vitamin B12 and vitamin B2 ஆகியவை நிறைந்துள்ளதால், வைரஸ் தொற்றுகளுக்கு எதிரான antibody செயல்பாடுகளை அதிகரிக்கும்.
  3. கொரோனாவிலிருந்து பாதுகாப்பதில் நோய் எதிர்ப்பு சக்தியின் பங்கு உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு வைரஸுக்கு எவ்வாறு பதிலளிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும். நோயெதிர்ப்பு அமைப்பில் முதன்மையானது உள்ளார்ந்த நோயெதிர்ப்பு அமைப்பு(Innate immune system), தோல், தொண்டை மற்றும் குடல் மீதான அடுக்குகள், நமது ரத்தத்தில் உள்ள இரசாயனங்கள் மற்றும் பல்வேறு நோயெதிர்ப்பு செல்கள் ஆகியவை இதில் அடங்கும்.

மறுபுறம், தகவமைப்பு அல்லது பெறப்பட்ட நோயெதிர்ப்பு அமைப்பு (adaptive or acquired immune system) வைரசுக்கு எதிரான antibodies மற்றும் வெள்ளை ரத்த அணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது. இது வைரஸ் இரண்டாவது முறையாக தாக்கினால் அதை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.

  1. க்ரீன் டீ குடிப்பதால் கொரோனாவை தடுக்கவோ அல்லது குணப்படுத்தவோ முடியுமா? நிபுணர்களின் கூற்றுப்படி, கிரீன் டீயில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பாலிஃபீனால்கள் உள்ளன. இது ஜிகா, ஹெபடைடிஸ் சி, இன்ஃப்ளூயன்ஸா (காய்ச்சல்), டெங்கு போன்ற ஒற்றை இழை கொண்ட ஆர்என்ஏ வைரஸ்களுக்கு எதிராக செயலாற்றும்.

கொரோனாவும் ஒரு ஆர்.என்.ஏ வைரஸ்தான் என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். க்ரீன் டீயின் மூலக்கூறுகளில் ஏதேனும் ஒன்று கொரோனாவுக்கு எதிராக செயல்படக்கூடியதாக இருக்கலாம். ஆனால் நிச்சயம் அது கொரோனாவுக்கு எதிராக செயல்படுகிறது என்பதை துல்லியமாக சொல்லக் கூடிய ஆய்வு முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை.

  1. ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?

ஆர்எஸ்சி அட்வான்சஸ் என்ற மருத்துவ பத்திரிகை வெளியிட்ட ஆய்வு முடிவின்படி,க்ரீன் டீயில் உள்ள மூலக்கூறுகள் SARS-CoV-2வை கட்டுப்படுத்துகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவு குறித்து இந்திய நிபுணர்களும் ஆராய்ந்து வருகின்றனர்.

ஆரம்ப கட்ட ஆய்வுகள் கிரீன் டீயில் உள்ள கலோகாடெசின், கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடக்கூடும் என்று கூறப்பட்டது. கிரீன் டீயில் உள்ள அந்த பொருள் உடலுக்கு சுறுசுறுப்பை அளிக்கக் கூடிய கிரீன் டீ உடனடியாக கிடைக்கக்கூடியது, எளிதில் அணுகக்கூடியது மற்றும் மலிவு விலையில் கிடைக்கும்.

இந்த கலோகாடெசின் பற்றிய ஆய்வுகள், பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு வழிவகுப்பதாகவும் மற்றும் தொற்று நோய்களுக்கு எதிரான போராட்டத்தில் இயற்கையாக கிடைக்கும் பொருட்கள் எப்போதும் முக்கிய ஆதாரமாக இருக்கின்றன என்பதை நிரூபிக்கிற வகையிலும் உள்ளது.

  1. கிரீன் டீ குடிப்பதால் கிடைக்கும் பலன்கள் :

முதலில், இது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. பெருங்குடல், மார்பகம் மற்றும் பிராஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. அடுத்து இதய நோய்கள் வருவதற்கான அபாயங்களை தடுக்க உதவுகிறது. உடலில் கொழுப்பைக் குறைப்பதால் உடல் எடை குறைகிறது. சுவாச பிரச்னைகள், வாய் துர்நாற்றம் நீங்கும். சர்க்கரை நோயின் அபாயம் குறைகிறது. ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

Previous article‘ஜென்டில்மேன் சூர்யா’ – நடிகை கிரித்தி ஷெட்டி புகழாரம்
Next articleமக்கள் புரட்சியை அடக்க இலங்கைக்கு இந்திய படைகள் அனுப்பப்படுமா? தூதரகம் பதில்