‘ஜென்டில்மேன் சூர்யா’ – நடிகை கிரித்தி ஷெட்டி புகழாரம்

0
160

தெலுங்கில் உப்பென்னா திரைப்படம் மெகா ஹிட்டானதை தொடர்ந்து அந்தப் படத்தில் நடித்த நடிகை கிரித்தி ஷெட்டிக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. உப்பென்னா படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி மிரட்டலான தோற்றத்தில் நடித்திருப்பார். கிரித்தி ஷெட்டி தற்போது சூர்யா நடிப்பில் பாலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் வணங்கான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் குறித்து சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

நான் நடித்த கேரக்டர்களில் பாலா சார் படத்தில் நடிக்கும் கேரக்டர் அற்புதமாக இருக்கும். அவருடன் பணியாற்றியதை மிகச் சிறந்த அனுபவமாக உணர்கிறேன். படப்பிடிப்பு நடைபெறுவதற்கு முன்பாக படம் தொடர்பான அறிவிப்பு வந்தபோது, சூர்யா சாரைப் பற்றி எல்லோரும் நல்ல விதமாக கூறினார்கள். அவருடைய பல படங்களை நான் பார்த்திருக்கிறேன். சூர்யா சாரின் நடிப்பு மிகவும் பிடிக்கும். அவர் அர்ப்பணிப்புடன் நடிப்பார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் நேரில் அவரை பார்க்கும்போது மற்ற எல்லோரும் கூறியதை விட சூர்யா சார் சிறப்பானவராக இருந்தார். அவர் ஒரு ஜென்டில் மேன். இவ்வாறு அவர் கூறினார்.

பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்திற்கு வணங்கான் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியானது.
வணங்கான் படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங் கோவாவில் நடைபெறவுள்ளது. இந்த படத்தில் அப்பா மகன் என 2 வேடங்களில் சூர்யா நடிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. கடைசியாக. பாலா இயக்கத்தில், ஆர்யா, விஷால் நடித்த அவன் இவன் படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.