இலங்கையில் வரும் 20-ம் தேதி புதிய அதிபரை தேர்வு செய்ய உள்ளதாக தகவல்

0
267

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாட்டால் கொதித்தெழுந்த மக்கள் அங்கு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், அதிபர் மாளிகையை கைப்பற்றினர். இலங்கை அதிபர் மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள போராட்டக்காரர்கள் பலர் தற்போது அங்கேயே தங்கியுள்ளனர். இதனைதொடர்ந்து அனைத்துக் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கும் வகையில் இலங்கை அமைச்சரவை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர்.

மேலும் கொழும்பு ரத்மலானை விமானப்படை தளத்தில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இலங்கையில் வரும் 20-ம் தேதி புதிய அதிபரை தேர்வு செய்ய அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கோத்தபய ராஜபக்சே ஜூலை 13ம் தேதி பதவி விலகினால், அதிபர் பதவிக்கான வேட்புமனுக்கள் ஜூலை 19ம் தேதி ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் 20ம் தேதி புதிய அதிபர் தேர்வு செய்யப்படும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Previous articleமக்கள் புரட்சியை அடக்க இலங்கைக்கு இந்திய படைகள் அனுப்பப்படுமா? தூதரகம் பதில்
Next articleநாட்டை விட்டு தப்பி செல்ல முயன்ற பசிலை விரட்டியடித்த மக்கள்