ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை அவர் சபாநாயகருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பதவி விலகல் கடிதம் சபாநாயகருக்கு கிடைத்த பின்னர், அது தொடர்பில் சபாநாயகர் நாட்டுக்கு அறிவிக்கவுள்ளார்.
இந்நிலையில் 15 ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அதனை தொடர்ந்து 20 ஆம் திகதி சபையை கூட்டி புதிய ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.