பொன்னியின் செல்வனுக்காக 5 மொழிகளில் டப்பிங் பேசி அசத்திய நடிகர் விக்ரம்

0
160

விக்ரம், ஐஷ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய் ஆகியோரின் கதாப்பாத்திரங்களின் பெயர், அவர்களின் தோற்றங்களை படக்குழுவினர் வெளியிட்டனர். இவை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. இதனை தொடர்ந்து தமிழ் உள்பட 5 மொழிகளில் பொன்னியின் செல்வன் பட டீசர் வெளியிடப்பட்டது. முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியிடப்படவுள்ளது.

ஆனால் உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் விக்ரம், டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை. இதனால் அவரது ரசிகர்களுக்காக விக்ரம் 5 மொழிகளில் டப்பிங் பேசிய வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகால சோழன் கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்துள்ளார். இதனை குறிப்பிடுவதற்காக, எங்கள் சோழ தேசத்தின் வேங்கையில் கர்ஜனை 5 மொழிகளில் என குறிப்பிட்டு இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.