Newsகோட்டாவின் பதவி விலகலால் டொலர் மழையில் இலங்கை

கோட்டாவின் பதவி விலகலால் டொலர் மழையில் இலங்கை

-

வெளிநாடுகளில் உள்ள இலங்கையை சேர்ந்தோர் அரச தலைவர் பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ச விலகிய பின்னர், அதிகாரபூர்வமாக தமது டொலர் வருமானத்தை சிறிலங்காவுக்கு அனுப்ப தொடங்கியுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

கோட்டாபய பதவி விலகும் வரை இலங்கைக்கு ஒரு டொலர் கூட அனுப்ப மாட்டோம் என்று முன்னர் அவர்கள் தெரிவித்து இருந்தனர்.

இதன்படி தற்போது, வெளிநாட்டு பணியாளர்கள் மற்றும் வெளிநாட்டில் வாழும் சிறிலங்காவைச் சேர்ந்தோர் நாட்டில் உள்ள தமது உறவினர்களுக்கு பணம் அனுப்பத் தொடங்கியுள்ளனர்.

Srilankadollarchallenge என முகநூல் பக்கத்தினை உருவாக்கி பணத்தினை அனுப்புமாறு மற்றவர்களையும் ஊக்குவிக்கத் தொடங்கியுள்ளனர்.

மேலும் அவர்களில் பலர் இலங்கைக்கு டொலர்கள் அனுப்பியதனை உறுதிப்படுத்தும் வகையில் இது தொடர்பான பரிவர்த்தனைகளின் ஒளிப்படங்களை முகநூல் வாயிலாக வெளியிட்டு வருகின்றனர்.

பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றி சிறிலங்காவில் உள்ள வங்கிகள் ஊடாக டொலர்களை அனுப்புமாறும் மற்றவர்களுக்குத் தெரிவித்து வருகின்றனர்.

எனினும் தற்போது சிறிதளவு பணம் அனுப்புவதாகவும், நாட்டில் அரசியல் சூழல் சுமூகமான பின்னர் உரிய முறையில் பணம் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கின்றனர்.

போராட்டம் நடத்திய இளையோருக்கும் தமது நன்றிகளை தெரிவித்துள்ளதாக கொழும்பு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

Latest news

நட்சத்திரங்கள் நிறைந்த புதிய பிரச்சாரத்தை தொடங்கியுள்ள Tourism Australia

உலகம் முழுவதிலுமிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை ஆஸ்திரேலியாவிற்கு ஈர்க்கும் வகையில், ஆஸ்திரேலியா சுற்றுலாத் துறை தனது சமீபத்திய விளம்பர பிரச்சாரத்தை வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் அதற்கு அப்பால்...

Work from Home – சுதந்திரமா அல்லது வற்புறுத்தலா?

விக்டோரியன் முதல்வர் ஜெசிந்தா ஆலனின் வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டம் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொள்கிறது. விக்டோரியா மாகாணத்தில் உள்ள அனைத்து மக்களும் வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களாவது...

FOGO DUSTUBIN பற்றி ஆஸ்திரேலியர்கள் தெரிவித்த கருத்துக்கள்

ஆஸ்திரேலிய நகராட்சிகளில் கழிவுகளைக் குறைக்கும் நோக்கத்துடன் FOGO குப்பைத் தொட்டிகளின் அறிமுகம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் இது குறித்து பொதுமக்களிடையே கலவையான எதிர்வினைகள் இருப்பதாகத் தெரிகிறது....

பிறப்புகளை அதிகரிக்க அரசாங்கத்திடமிருந்து $5,000 போனஸ்

நாடு முழுவதும் குறைந்து வரும் கருவுறுதல் விகிதத்திற்கு தீர்வாக, குழந்தை போனஸை மீண்டும் வழங்க மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக, புதிய பெற்றோருக்குப் பிறக்கும் ஒவ்வொரு...

பிறப்புகளை அதிகரிக்க அரசாங்கத்திடமிருந்து $5,000 போனஸ்

நாடு முழுவதும் குறைந்து வரும் கருவுறுதல் விகிதத்திற்கு தீர்வாக, குழந்தை போனஸை மீண்டும் வழங்க மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக, புதிய பெற்றோருக்குப் பிறக்கும் ஒவ்வொரு...

NSW வெள்ளத்தில் காணாமல் போன பெண்ணும் காரும்

நியூ சவுத் வேல்ஸின் ஹண்டர் பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு பெண் தனது காருடன் காணாமல் போயுள்ளார். மாநிலம் தற்போது பலத்த மழையை அனுபவித்து வருகிறது. நேற்று...