News கோட்டாவின் பதவி விலகலால் டொலர் மழையில் இலங்கை

கோட்டாவின் பதவி விலகலால் டொலர் மழையில் இலங்கை

-

வெளிநாடுகளில் உள்ள இலங்கையை சேர்ந்தோர் அரச தலைவர் பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ச விலகிய பின்னர், அதிகாரபூர்வமாக தமது டொலர் வருமானத்தை சிறிலங்காவுக்கு அனுப்ப தொடங்கியுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

கோட்டாபய பதவி விலகும் வரை இலங்கைக்கு ஒரு டொலர் கூட அனுப்ப மாட்டோம் என்று முன்னர் அவர்கள் தெரிவித்து இருந்தனர்.

இதன்படி தற்போது, வெளிநாட்டு பணியாளர்கள் மற்றும் வெளிநாட்டில் வாழும் சிறிலங்காவைச் சேர்ந்தோர் நாட்டில் உள்ள தமது உறவினர்களுக்கு பணம் அனுப்பத் தொடங்கியுள்ளனர்.

Srilankadollarchallenge என முகநூல் பக்கத்தினை உருவாக்கி பணத்தினை அனுப்புமாறு மற்றவர்களையும் ஊக்குவிக்கத் தொடங்கியுள்ளனர்.

மேலும் அவர்களில் பலர் இலங்கைக்கு டொலர்கள் அனுப்பியதனை உறுதிப்படுத்தும் வகையில் இது தொடர்பான பரிவர்த்தனைகளின் ஒளிப்படங்களை முகநூல் வாயிலாக வெளியிட்டு வருகின்றனர்.

பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றி சிறிலங்காவில் உள்ள வங்கிகள் ஊடாக டொலர்களை அனுப்புமாறும் மற்றவர்களுக்குத் தெரிவித்து வருகின்றனர்.

எனினும் தற்போது சிறிதளவு பணம் அனுப்புவதாகவும், நாட்டில் அரசியல் சூழல் சுமூகமான பின்னர் உரிய முறையில் பணம் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கின்றனர்.

போராட்டம் நடத்திய இளையோருக்கும் தமது நன்றிகளை தெரிவித்துள்ளதாக கொழும்பு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

Latest news

சிட்னி அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண் சடலமாக மீட்பு – விசாரணைகள் ஆரம்பம்

மேற்கு சிட்னி அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண்ணின் சடலத்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு காரணம் குடும்ப தகராறு என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா அரசு ஊழியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு இரட்டிப்பு

விக்டோரியாவில் பொதுத்துறை ஊழியர்களுக்கான வருடாந்திர ஊதிய உயர்வு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வருடத்திற்கு 1.5 வீத சம்பள அதிகரிப்புக்கு...

YouTube-இல் அதிரடி மாற்றம்! இனி இந்த வசதியை பயன்படுத்த முடியாது

யூடியூபில் ஸ்டோரீஸ் என்ற வசதி நீக்கப்பட உள்ளதாக, கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.கூகுள் நிறுவனத்தில் பிரபலமான செயலியாக அறியப்பட்டும் யூடியூப்பில், ஸ்டோரீஸ் என்ற வசதி...

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இலங்கையர் என்ற பெருமையை பெற்ற ஈழத் தமிழர்

இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் 46 வயதான விவேகானந்தன் துஷியந்தன் , முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை 8849 மீற்றர் உயரமான...

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இலங்கையர் என்ற பெருமையை பெற்ற ஈழத் தமிழர்

இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் 46 வயதான விவேகானந்தன் துஷியந்தன் , முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை 8849 மீற்றர் உயரமான...

பெர்த் மருத்துவர்களுக்கு ChatGPT தடை

AI அல்லது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பெர்த் நகரத்தில் உள்ள மருத்துவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் தனிப்பட்ட...