Breaking Newsஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்திக்கொள்ள 500 டொலர் வழங்கும் அரசாங்கம்!

ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்திக்கொள்ள 500 டொலர் வழங்கும் அரசாங்கம்!

-

ஆஸ்திரேலிய அரசாங்கம் கொரோனா நெருக்கடிகால நிதியுதவித் திட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு அத்திட்டம் நிறைவடைந்தது. அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு புதிய அறிவிப்பு வந்துள்ளது.

இந்த திட்டத்தின்கீழ் மருத்துவ விடுப்பில்லாமல் தனிமைப்படுத்திக்கொள்ள நேரிடுவோருக்கு 500 டொலர் வழங்கப்படும். செப்டம்பர் மாத இறுதிவரை திட்டம் நடப்பிலிருக்கும்.

மாநில, மத்திய அரசாங்கங்கள் இணைந்து அந்த நிதியுதவியை வழங்கும். புதிய BA.4, BA.5 ரக ஒமிக்ரோன் கிருமிகள் அதிவேகமாய்ப் பரவுவதைத் தொடர்ந்து அத்திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் கொரோனா நோய்த்தொற்றுச் சம்பவங்கள் மேலும் உயரக்கூடும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். ஆஸ்திரேலியாவின் பல்வேறு மாநில மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஏற்கனவே அதிகமாக உள்ளது.

குறிப்பாக வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய மாநிலம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நியூ சௌத் வேல்ஸ் மாநில மருத்துவமனைகளில் இவ்வாரம் சேர்க்கப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2,000க்கும் அதிகம்.

பெப்ரவரி மாதத்துக்குப் பிறகு அத்தகைய நிலை ஏற்பட்டிருப்பது இது முதல்முறையாகும். நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Latest news

ஆஸ்திரேலியாவில் சுறா தாக்கி 17 வயது சிறுமி மரணம்

ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலாத் தலத்தின் நீரில் சுறா தாக்கி ஒரு பெண் நீச்சல் வீரர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிரிஸ்பேர்ணுக்கு வடக்கே...

பாக்டீரியா அச்சுறுத்தல் காரணமாக குடிநீரை கொதிக்க வைத்து பருகுமாறு அறிவுறுத்தல்

நியூ சவுத் வேல்ஸின் மத்திய கடற்கரையில் வசிப்பவர்கள் கொதிக்க வைத்த தண்ணீரை உட்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அந்தப் பகுதிகளில் குழாய் நீரில் E.coli என்ற பாக்டீரியா கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து...

ஜெர்மனியில் நடந்த கார் விபத்தில் 11 வயது இலங்கைச் சிறுமி உயிரிழப்பு

ஜெர்மனியில் நடந்த கார் விபத்தில் 11 வயது இலங்கைச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த விபத்தில் இறந்தவர் "கனகராஜா மோனிதா" என்ற...

விக்டோரியன் பெண்களுக்கு இலவச இனப்பெருக்க சுகாதார சேவை

விக்டோரியன் பெண்களுக்கு அத்தியாவசிய சுகாதார சேவைகளை இலவசமாக வழங்க மாநில அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் இலவச சிறப்பு சிகிச்சை அளிக்க...

குயின்ஸ்லாந்து பகுதிகளுக்கு மேலும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கைகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குயின்ஸ்லாந்து மக்களுக்கு புயல்கள் மற்றும் கனமழைக்கான ஆபத்து தொடர்ந்து இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். பருவமழை அழுத்தம் தீவிரமாக இருப்பதால், இந்த வாரம் முழுவதும்...

நெருக்கடியில் உள்ள விக்டோரியர்களின் கல்வி

விக்டோரியன் கல்வி ஒரு "நெருக்கடியில்" இருப்பதாக STEM குழுக்கள் எச்சரிக்கின்றன. அறிவு சார்ந்த பொருளாதாரத்திற்கு விக்டோரியாவில் மிகவும் திறமையான தொழிலாளர்கள் இல்லை என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். STEM (அறிவியல்,...