“சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்கவும்”- இலங்கைக்கான அமெரிக்க தூதர் வலியுறுத்தல்

0
208

இலங்கையில் அரசு பிரதிநிதிகள் அனைத்து தரப்பினருடன் ஒத்துழைக்க வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங் வலியுறுத்தி உள்ளார். கோத்தபய ராஜபக்சே வெளியேறியதை சுட்டிக்காட்டி டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், சட்டத்தின் ஆட்சியை பாதுகாப்பதில் இனிவரும் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும், பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டு உள்ளார். இலங்கை மக்களின் ஜனநாயக விருப்பங்களுக்கு அமெரிக்கா துணை நிற்கும் எனவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ஜூலி சங் குறிப்பிட்டு உள்ளார்.