Breaking Newsஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்திக்கொள்ள 500 டொலர் வழங்கும் அரசாங்கம்!

ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்திக்கொள்ள 500 டொலர் வழங்கும் அரசாங்கம்!

-

ஆஸ்திரேலிய அரசாங்கம் கொரோனா நெருக்கடிகால நிதியுதவித் திட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு அத்திட்டம் நிறைவடைந்தது. அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு புதிய அறிவிப்பு வந்துள்ளது.

இந்த திட்டத்தின்கீழ் மருத்துவ விடுப்பில்லாமல் தனிமைப்படுத்திக்கொள்ள நேரிடுவோருக்கு 500 டொலர் வழங்கப்படும். செப்டம்பர் மாத இறுதிவரை திட்டம் நடப்பிலிருக்கும்.

மாநில, மத்திய அரசாங்கங்கள் இணைந்து அந்த நிதியுதவியை வழங்கும். புதிய BA.4, BA.5 ரக ஒமிக்ரோன் கிருமிகள் அதிவேகமாய்ப் பரவுவதைத் தொடர்ந்து அத்திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் கொரோனா நோய்த்தொற்றுச் சம்பவங்கள் மேலும் உயரக்கூடும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். ஆஸ்திரேலியாவின் பல்வேறு மாநில மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஏற்கனவே அதிகமாக உள்ளது.

குறிப்பாக வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய மாநிலம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நியூ சௌத் வேல்ஸ் மாநில மருத்துவமனைகளில் இவ்வாரம் சேர்க்கப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2,000க்கும் அதிகம்.

பெப்ரவரி மாதத்துக்குப் பிறகு அத்தகைய நிலை ஏற்பட்டிருப்பது இது முதல்முறையாகும். நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Latest news

முதல் ராக்கெட் ஏவுதலுக்கு தயாராகியுள்ள ஆஸ்திரேலியா

விண்வெளிக்குச் சென்று எலோன் மஸ்க்கின் SpaceX உடன் போட்டியிடத் தொடங்கும் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் கனவுக்கான நேரம் தொடங்கிவிட்டது. ஆஸ்திரேலிய விண்வெளி மற்றும் உற்பத்தி வரலாற்றில் ஒரு மைல்கல்...

 3 ஆஸ்திரேலிய மாநிலங்களில் நிலவும் வரலாறு காணாத அளவு வறட்சி

இந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஆஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களை பாதித்துள்ளது. இந்த ஆண்டு விக்டோரியா மற்றும் டாஸ்மேனியாவின் சில பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக வானிலை...

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. திங்கட்கிழமை...