Newsகல்யாண ரிசப்ஷன் அலப்பறைகள்

கல்யாண ரிசப்ஷன் அலப்பறைகள்

-

பத்திரிகை கொடுக்கறச்சயே அலப்பறை ஆரம்பமாயிடறது!

ஆமாம்! இப்பல்லாம் யாரும், கல்யாணத்துக்கு – முஹூர்த்தத்துக்கு – வரச்சொல்லி, அழைக்கறதில்ல!

ரிசப்ஷனுக்குன்னே, தனியா பத்திரிகை ப்ரிண்ட் பண்றா! அதுவே, ஒவ்வொண்ணும் கொறஞ்சது, முன்னூறு, நானூறு ரூபாய் இருக்கும்!

காரணமில்லாம, திடீர்னு, மாமனார் மேல கோபம் வந்துது. எனக்கெல்லாம், அந்த வெளில மிட்டாய் கலர், உள்ள மஞ்சள் கலர்ல இருக்கற ‘உபயகுசலோபரி…’ பத்திரிகைதான்!

சரி! அழைக்கறதுதான் அழைக்கறா! எப்டி அழைக்கறா தெரியுமோ?

‘சார், மேரேஜ், எங்க ஃபேமிலி வழக்கப்படி, எங்க குலதெய்வம் – சின்னத் திருப்பதி வெங்கடாசலபதி – கோவில்ல வெச்சிருக்கோம் சார்! (இதுவும் உள்ளூர் தான்!) முஹூர்த்தம், எர்லி மார்னிங் 5 to 6 மணி சார்! உங்களுக்கு வர்றதுக்கு சௌகர்யப்படாது! (டேய்! நான்லாம், தெனமும் நாலு மணிக்கே எழுந்திருக்கறவன்டா!) அதனால, மொத நாளே, நம்ம ஃபைவ் ரோட்ஸ் xyz கல்யாண மண்டபத்துல ரிசப்ஷன் வெச்சிருக்கேன், சார்! ரிசப்ஷன், ஈவ்னிங்தான் சார்! நீங்க, ஆஃபிஸ் முடிச்சுட்டு, அப்டியே நேரா வந்துடலாம், சார்! கண்டிப்பா, ஃபேமிலயக் கூட்டிட்டு வாங்க, சார்!’

(டேய்! டேய்! அதெப்டிடா ஆஃபிஸ்லர்ந்து நேராவும் வரணும்? ஃபேமிலயவும் கூட்டிட்டு வரணும்? நான் என்ன ஆஃபிஸ்ல ஒரு ஃபேமிலியா மெய்ன்டெய்ன் பண்ணிட்டிருக்கேன்?)

ஸாஸ்த்ர ஸம்ப்ரதாயத்துலயே ஊறிப்போன நமக்கு, மாங்கல்யதாரணம் முடிஞ்சு, பாணி’க்ரஹணம்’ பிடிச்சு – ஸாரி! பாணிக்ரஹணம் முடிஞ்சு, ஸப்தபதியும் முடிஞ்சாத்தான், கன்யகாதானம் முடிஞ்சு, கல்யாணம் ஆனதா அர்த்தம்னு, நம்மாத்து நடராஜ வாத்யார், சொன்னதெல்லாம் பளிச்சுன்னு ஞாபகம் இருக்கறதால, இந்தக் கல்யாணத்துக்கு முன்னாலயே ரிசப்ஷன்ங்கறத ஏத்துக்க முடியறதில்ல!
ஆனா, ‘உலகத்தோடு ஒட்டி வாழ்’னும் பெரியவா சொல்லியிருக்கிறதால, போகவேண்டியதாயிருக்கு!

இதுல, பத்திரிகையக் குடுத்துட்டுக் கால்ல வேற விழுந்து, நம்ம வயச வேற ஞாபகப்படுத்தி விட்டுட்டுப் போயிடறாங்க!

சரின்னு, ஆத்துக்கு வந்து, இன்ன தேதி, இங்க, இன்னாரோட ரிசப்ஷனுக்குப் போகணும்னு சொன்னதும், ஆத்துக்காரிக்கு, வாயெல்லாம் பல்! (அப்பாடா! ஒரு நாளாவது நைட் சமையல்லேர்ந்து தப்பிக்கலாம்! – இது, ஆத்துக்காரி மைண்ட் வாய்ஸ்!

ஃப்ரிட்ஜ் அழப்போறது – இது நம்ம மைண்ட் வாய்ஸ்!)

சரின்னு, சொன்ன தேதிக்கு, ஸ்கூட்டர்லயோ, கார்லயோ மண்டபத்துக்குப் போனா, மல்டிப்ளக்ஸ் பார்க்கிங் லாட் மாதிரி நாலு பேர், இங்க போ, அங்க போன்னு அலக்கழிக்கறா! இதுல, அவாள்லாம் மாப்ள மாதிரி கோட், சூட் வேற போட்ருக்கா!

நாம, குன்னூர்க்குக் குடிபோன புதுசுல, குளிருக்குக் கோட் போட்ருந்த பால்காரனைப் பாத்தே, அட்டென்ஷன்ல ஸல்யூட் வெச்ச பார்ட்டி!

ஒரு வழியா வண்டிய பார்க் பண்ணி, டோக்கனை (ஆமாங்க! டோக்கனேதான்!) வாங்கிண்டு, மண்டபத்துக்குள்ள நொழஞ்சா, இன்னொரு நாலு கோட்டும், ரெண்டு பட்டுப் பொடவையும், நாம ஏதோ நாலு நாள் சாப்டாம பட்னி கெடந்துட்டு இங்க வந்திருக்கற மாதிரி ‘வாங்க சார்! வாங்க மேடம்! நேரா சாப்டப் போயிடலாம்’-னு, கையப் பிடிச்சுக் தர தரன்னு டைனிங் ஹாலுக்கு இழுத்துண்டு போயிடறா! விட்டா, ஒரு தட்டுல மம்மு பெசஞ்சு எடுத்துண்டு வந்து, வாசல்லயே ‘ஆ! காட்டு!’ ன்னு ஊட்டி விட்டுடுவா போலருக்கு!

சரின்னு, டைனிங் ஹால் போனா, ஏதோ பஃபேவாம்! ஜெயில் மாதிரி தட்டத்தைக் கைல பிடிச்சுண்டு வரிசைல போகணுமாம்.

எதுவுமே நம்ப பக்கத்து ஐட்டம் இல்ல! தீவட்டிப்பட்டி குடும்பத்தார் கல்யாண ரிசப்ஷன்ல, எல்லாரும் ஏதோ வட நாட்டுலயே பொறந்து வளந்த மாதிரி, எல்லாம் நார்த் இண்டியன் ஐட்டம்தான்!

காசி அல்வா, மல்லிப்பூ இட்லி, மெதுவடை, சின்னதா ரெண்டு தோசை, தேங்காய் சட்னி, சாம்பார், மொளகாப்பொடி/நல்லெண்ணெய், கும்பகோணம் டிகிரி காஃபி – இதுதான நம்ம கல்யாணத்துலல்லாம் ஜானவாசத்தன்னைக்கான மெனு?

இங்க பாத்தா, நான் (இது, இங்க்லீஷ் நான்), பட்டர் நான், ரோட்டி, ருமாலி ரோட்டி, குல்ச்சா, ஸ்டஃப்ட் குல்ச்சா ன்னு வாயில நொழையாத (?) ஐட்டம்!

இதுக்குத் தொட்டுக்கவும், ஒரே மசாலா மணத்தோட நாப்பது ஸைட் டிஷ்!

ஹாங்! சூப் வேற நாலு வெரைட்டி!

இது போதாதுன்னு, ரெண்டு வகை பிரியாணி, ரெண்டு வகை ஃப்ரைட் ரைஸ் (ஆமாம்! பிரியாணிக்கும், ஃப்ரைட் ரைஸ்க்கும் என்ன வித்யாசம்?), பேல் பூரி, பானி பூரி, மசாலா சாட்னு இப்டி ஒரே பாம்பே ஐட்டம்தான் போங்கோ?

கைப்பிடி தயிருஞ்சாதம் கெடைக்காதான்னு ஏக்கமா இருந்தப்ப, பக்கத்துல யார் தட்டத்துலயோ, வெள்ளையா தயிருஞ்சாதம் மாதிரி ஒண்ணப் பாத்துட்டு, ஸர்விங் டேபிளுக்கு ஓடினா, அது தயிர் சேமியாவாம்! சேமியாவே கொழ கொழா! இதுல தயிர வேற ஊத்திண்டு! கர்மம்! கர்மம்!

ஏதோ வந்த கொறைக்கு சாப்டோம்னு பேர் பண்ணிண்டு, இந்த மசாலா டேஸ்ட் போக, வாய் நெறய கும்மோணம் வெத்தல சீவல் தாம்பூலம் தரிக்கலாம்னா, அதுவும் ஏதோ 120, 320 ன்னு, வட நாட்டு பான் பீடாவாக் கெடக்கு!

வெறுத்துப் போயி, வாய் கொப்பளிச்சுட்டு, மண்டபத்துக்கு வந்தா, பொண்ணு-மாப்பிள்ளைக்கு கிஃப்ட் வெக்க, ரயில்வே ஸ்டேஷன் தத்கால் ரிசர்வேஷன் க்யூ மாதிரி பெரிய க்யூ நிக்கறது.

பேசாம இதுக்கும் டோக்கன் போட்ருக்கலாம் இவா!

கால் கடுக்க அரை மணி க்யூவுல நின்னு, நம்ம கிஃப்ட மாப்ள கைல திணிச்சு க்ரீட் பண்ணி சம்ப்ரதாய கால் இஞ்ச் கடைவாய்ச் சிரிப்போட ஃபோட்டோ எடுத்துக்கறச்சே, மாப்ள, இருக்கற டயர்டுக்கு நாம வந்ததையெல்லாம் ஞாபகம் வெச்சுப்பானான்னு கவலையாய்டுத்து!

அதான் சாப்டாச்சு! கிஃப்ட் குடுத்தாச்சு! வேற என்ன வேலை? இப்பவே கெளம்பினாத்தான், அரை மணிலயாவது, பார்க்கிங்லேர்ந்து வண்டிய வெளில எடுக்க முடியும்!

வாசல்ல, தாம்பூலப்பைன்னு ஒரு சணல் பை குடுத்தா! உள்ள வெத்தல, பாக்கு, தேங்காய், ஆரஞ்செல்லாம் இல்ல! காஞ்சு போன ஒரு செடி, சின்னத் தொட்டில வெச்சுக் குடுத்தா! என்விரன்மென்டல் ஃப்ரெண்ட்லியாம்!

டேய்! டேய்! நானூறு ரூபாய்க்குப் பத்திரிக்கை அடிக்கறச்ச இது ஞாபகம் இல்லையாடா?

சரி! வரட்டுமா! மாப்ள!
நாளைக்கு ப்ரிட்ஜ் சாப்பாடு என்ன ?மனம் ஓட வண்டியைத் தேடி…

“தான்யம், தனம், பஸும், பஹுபுத்ர லாபம், ஸத ஸம்வத்ஸரம் தீர்க்கமாயு:”

Latest news

நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர் எச்சங்கள் கண்டுபிடிப்பு

பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர் இனம் வாழ்ந்தமைக்கான கால் தடங்கள், எலும்புகள், புதை படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் டைனோசரின் பல இனங்கள் கண்டறியப்பட்டன. இந்நிலையில்,...

ஜனவரி 1 முதல் ஆஸ்திரேலியாவில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் இ-சிகரெட்டுகள் இறக்குமதிக்கு தடை

அவுஸ்திரேலியாவில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய இலத்திரனியல் சிகரெட்டுகளை இறக்குமதி செய்வதற்கு ஜனவரி 1ஆம் திகதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இ-சிகரெட் மீதான மத்திய அரசின் கடும் நடவடிக்கையின் முதல்...

ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் மிகவும் குறைவாக பாலின ஊதிய இடைவெளி பதிவு

ஆஸ்திரேலியாவில், பாலின ஊதிய இடைவெளி வரலாற்றில் மிகக் குறைந்த மதிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, தற்போது அது 21.7 சதவீதமாக குறைந்துள்ளது, ஆனால் பெண்களின் ஆண்டு சம்பளம்...

டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இருந்து பாதியாக குறைந்துள்ள ஆஸ்திரேலியர்கள்

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தவிர்த்து, பணத்தை மட்டும் பயன்படுத்தி பணம் செலுத்தும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை கடந்த 03 ஆண்டுகளில் பாதியாக குறைந்துள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் நடத்திய...

ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் மிகவும் குறைவாக பாலின ஊதிய இடைவெளி பதிவு

ஆஸ்திரேலியாவில், பாலின ஊதிய இடைவெளி வரலாற்றில் மிகக் குறைந்த மதிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, தற்போது அது 21.7 சதவீதமாக குறைந்துள்ளது, ஆனால் பெண்களின் ஆண்டு சம்பளம்...

டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இருந்து பாதியாக குறைந்துள்ள ஆஸ்திரேலியர்கள்

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தவிர்த்து, பணத்தை மட்டும் பயன்படுத்தி பணம் செலுத்தும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை கடந்த 03 ஆண்டுகளில் பாதியாக குறைந்துள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் நடத்திய...