அனைத்து மாவட்ட செயலகங்களில் குடிவரவு மற்றும் குடியகல்வு உப அலுவலகங்கள் உடனடியாக ஸ்தாபிக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும்,குடிவரவு மற்றும் குடியகல்வு உப அலுவலகங்களை அமைப்பதற்கு தற்போது மாவட்ட செயலகங்களில் இடம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டத்திற்கமைய,ஏற்கனவே மாவட்ட செயலகங்களில் இருந்து கடவுச்சீட்டை இணையத்தில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை தவிர, தெரிவு செய்யப்பட்ட சில பிரதேச செயலகங்களில் குடிவரவு மற்றும் குடியகல்வு உப அலுவலகங்களை நிறுவுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பத்தரமுல்லை பிரதான காரியாலயத்தின் நெரிசலைக் குறைப்பதே இந்த உப அலுவலகங்களை நிறுவுவதன் நோக்கம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.