அனைத்துலக நாணய பிரதிநிதிகளுடனான சந்திப்பு தொடர்பான ஆவணங்களை சிறிலங்கா பிரதமரின் அலுவலகத்தில் இருந்து போராட்டக்காரர்கள் கைப்பற்றிச் சென்றுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அனைத்துலக நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் தொடர்பான பல ஆவணங்கள் பிரதமர் அலுவலகத்தில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னர் பிரதமராகவும் தற்போது பதில் அரச தலைவராகவும் உள்ள ரணில் விக்கிரமசிங்க அனைத்துலக நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் பல சுற்றுப் பேச்சுக்களை நடத்திய போதிலும் அவர்கள் அனைவரின் பதிவுகளையும் பிரதமர் செயலகம் வைத்திருந்தது.
ஆனால், போராட்டக்காரர்கள் அலுவலகத்தை கைப்பற்றிய பிறகு கோப்புக்கள் காணாமல் போனதாக பிரதமர் அலுவலக செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த கோப்புக்களில் சிறிலங்காவுக்கு தேவையான உதவிகளை பெறுவது தொடர்பாக பல முக்கிய தகவல்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்ததாக அதில் தெரிவிக்கப்பட்டள்ளது.