News தூதுவிட்ட கோட்டா: நிராகரித்த சஜித் - பசிலும் சேர்ந்தே தப்பியோட்டம்

தூதுவிட்ட கோட்டா: நிராகரித்த சஜித் – பசிலும் சேர்ந்தே தப்பியோட்டம்

-

நீர்கொழும்பு கடற்பரப்பில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கோட்டாபய ராஜபக்ச தூது விட்டதாகவும் அதனை மீண்டும் மீண்டும் நிராகரித்து விட்டதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இது தொடர்பாக சிங்கள வார ஏடு ஒன்றும் சிங்கள இணையத்தளம் ஒன்றும் வெளியிட்ட செய்திகளின் தொகுப்பு:

கொழும்பில் உள்ள அரச தலைவர் மாளிகையில் கோட்டாபய ராஜபக்ச தங்கியிருந்தார் என்பது பலருக்குத் தெரியாது என்று அரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

ஆனால், பிற்பகலில் நிலைமை மோசமடைந்தது. கண்ணீர் புகை குண்டுகள் மூலம் தடுக்க முடியாத மக்கள் கூட்டம் அரச தலைவரின் மாளிகையின் முன்வந்து நின்றது. நிலைமை மோசமாக இருப்பதாகவும், அரச தலைவர் மாளிகையை விட்டு வெளியேறுமாறும் பாதுகாப்பு தரப்பினர் கோட்டாவிடம் கேட்டுக்கொண்டனர்.

அதன்படி, முற்பகல் 11:45 மணியளவில் கோட்டாவும் அவரது மனைவியுமான அயோமா ராஜபக்சவும் தங்களின் உடைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு அரச தலைவர் மாளிகையை விட்டு வெளியேறத் தயாரானார்கள். எமக்குக் கிடைத்த மற்றுமொரு அரசியல் செய்தியின்படி பசில் ராஜபக்சவும் அவர்களுடன் இருந்தார்.

படையினரின் அறிவுறுத்தலின் பேரில் இந்தக் குழுவினர் அரச தலைவர் மாளிகைக்கு அருகில் அமைந்துள்ள கடற்படைத் தலைமையகத்திற்குச் சென்றனர். ஏனையோரும் அரச தலைவர் மாளிகையை விட்டு வெளியேறும் நடவடிக்கையை தொடங்கினர்.

கோட்டாபய ராஜபக்ச, பசில் ராஜபக்ச உள்ளிட்டோர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கடற்படை தலைமையகத்தில் தங்கியிருந்தனர். அப்போது, கடற்படைக்கு சொந்தமான ‘கஜபா’ மற்றும் ‘சௌரலா’ கப்பல்கள் கோட்டாவின் அவசர வெளியேற்றத்துக்காக கடற்படைக்கு சொந்தமான துறைமுக இறங்குதுறையில் நங்கூரமிடப்பட்டிருந்தன.

15-20 நிமிடங்களுக்குள் கோட்டாபய உள்ளிட்ட அனைத்து பணியாளர்களும் கடற்படை இறங்குதுறையை அடைந்தனர். உலங்குவானூர்திகளைக் கூட ஏற்றிச் செல்லக் கூடிய கடற்படைக்கு சொந்தமான ‘கஜபா’ என்ற முதன்மைக் கப்பலில் கோட்டா அவரது மனைவி பிற முக்கியஸ்தர்கள் ஏறினர். ஏனையோர் ‘சௌரலா’ கப்பலில் ஏறினர். அப்போது கடற்படைக் கப்பலில் உயரடுக்கு குழு ஒன்று ஏறிய செய்தி படிப்படியாக நாட்டில் பரவியது குறிப்பிடத்தக்கது.

கோட்டாபய ராஜபக்ச கடற்பரப்பில் உள்ளதாக இந்தியா, மாலைதீவு உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு தெரிவிக்க கடற்படை நடவடிக்கை எடுத்திருந்தது. சிறிலங்கா எனும் குட்டித் தீவில் நடந்ததை மற்ற நாடுகளும் வியப்புடன் பார்த்தன.

இதற்கிடையில், கப்பல்கள் இந்திய கடல் பகுதிக்கு அருகில் சென்றதாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், இந்த கப்பல்கள் வேறொரு நாட்டின் கடல் எல்லைக்குள் நுழையாமல் தீவு நோக்கி திரும்பின. குழுவினர் மெதுவாக திருகோணமலைக்குத் திரும்பினர். இதன்படி, திருகோணமலையில் இருந்து கோட்டாபய மீண்டும் நாட்டிற்குள் நுழைந்தார். பின்னர், அந்த குழுவினர் இறுதியாக திருகோணமலை கடற்படை தளத்திற்கு சொந்தமான தீவில் பாதுகாப்பான இடத்தில் தங்கியிருந்தனர்.

சஜித்துக்கு தூதுவிட்ட கோட்டா

நீர்கொழும்பு கடற்பரப்பில் கப்பல் தரித்து நின்ற போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன மற்றும் அவருக்கு விசுவாசமான அமைச்சர்கள் பலருக்கு மூன்றாம் தரப்பின் ஊடாக பல செய்திகளை அனுப்ப கோட்டாபய ராஜபக்ச நடவடிக்கை எடுத்திருந்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித்துக்கு மிகவும் இரு முக்கிய செய்திகள் கிடைத்திருந்தன.

இதன்படி, சஜித்துக்கு கிடைத்த முதல் செய்தியில், தான் அரச தலைவராக நீடிக்க விரும்புவதாகவும், 19 ஆவது திருத்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தி நிறைவேற்று அதிகாரங்களை பிரதமர் தலைமையிலான நாடாளுமன்றத்திடம் ஒப்படைத்து, தன்னை பதவியில் தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதாவது, சஜித் பிரதமராகவும், பெயரளவில் அரச தலைவர் பதவியில் கோட்டா நீடிக்க அவருக்கு வாய்ப்பளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால், கோட்டாவின் யோசனையை சஜித் முதலாவது சுற்றிலேயே நிராகரித்து விட்டார்.

மக்களால் நிராகரிக்கப்பட்ட அரச தலைவரான கோட்டாவின் கீழ் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்வதற்கு தான் தயார் இல்லை என்று கோட்டாவுக்கு செய்தியை அனுப்பினார்.

அதனையடுத்து, மீண்டும் சஜித்துக்கு வேறு ஒரு தரப்பினரின் ஊடாக செய்தி அனுப்ப கோட்டா நடவடிக்கை எடுத்தார்.

சஜித்தை பிரதமராக்கியதன் பின்னர் அரச தலைவர் பதவியில் இருந்து விலகத் தயார் என்றும், ஆனால் அதன் பின்னர் தானும் தனது குடும்பமும் நாட்டில் பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு சஜித்தின் பாதுகாப்பு உத்தரவாதம் தேவை என்பதை அந்தச் செய்தியின் மூலம் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டா கேட்டுக் கொண்டார்.

அந்த செய்தியை கொண்டு வந்த நபரின் செய்தியை புரட்டிப் படித்த சஜித், முன்னாள் அரச தலைவர் ஒருவருக்கு அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பை வழங்குவதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றாலும், கோட்டாவுக்கு எந்தவொரு உத்தரவாதத்தையும் வழங்க முடியாது என்று மீண்டும் கோட்டாபய ராஜபக்சவுக்கு பதில் அனுப்பியிருந்தார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

புகலிடம் கோரி அவுஸ்திரேலியாவுக்கு வரும் மக்களுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

புகலிடம் கோரி அவுஸ்திரேலியாவுக்கு வரும் மக்களுக்காக தெற்கு அவுஸ்திரேலியாவில் புதிய புகலிட மையம் ஒன்று நிர்மாணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரேலிங் பவுண்ட் பெறுமதி வரலாறு காணாத வீழ்ச்சி!

அமெரிக்க டொலருக்கு நிகரான பிரித்தானிய ஸ்ரேலிங் பவுண்டின் பெறுமதி கணிசமாக அளவு வீழ்ச்சியடைந்துள்ளது.

சிட்னி மக்களுக்கு வழங்கப்பட்ட 50 டொலர் வவுச்சர்கள் தொடர்பில் விசேட அறிவிப்பு

சிட்னி குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட 50 வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் வரும் 9 ஆம் திகதியுடன் முடிவடையும் என்று...

ஆஸ்திரேலியாவின் குடிவரவு மையங்களில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

ஆஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு தற்போது தடுப்பு முகாம்களில் உள்ள சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பான நடவடிக்கைகளை துரிதப்படுத்த...

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு – பெற்றோர்களை தேடி செல்லும் இளைஞர்கள்

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதால், தங்கள் பெற்றோருடன் வாழ செல்லும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில்...

ஆஸ்திரேலியாவில் வியாழக்கிழமைக்குப் பிறகு உயரும் பெட்ரோல் விலை

ஆஸ்திரேலியாவில் பெற்றோல் வரிச்சலுகை எதிர்வரும் வியாழக்கிழமை நிறைவடைந்ததன் பின்னர் வாகன சாரதிகள் சுமக்க வேண்டிய மேலதிக செலவுகள்...