News பெட்ரோலுக்காக பல்கலைக்கழக மாணவி செய்த செயல்! யாழில் சம்பவம்

பெட்ரோலுக்காக பல்கலைக்கழக மாணவி செய்த செயல்! யாழில் சம்பவம்

-

யாழ்ப்பாணத்தில் மாணவி ஒருவர் ஒரு மூடை நெல் கொடுத்து 6 லீற்றர் பெற்றோல் வாங்கி தனது மோட்டார் சைக்கிளுக்கு விட்டு உல்லாச சவாரி செய்துள்ளார்.

யாழ் மீசாலைப் பகுதியில் வசிக்கும் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்.

தனது நண்பியின் பிறந்த தினத்திற்காக மீசாலையில் இருந்து வட்டுக்கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று பிறந்த தினத்தை சிறப்பித்த குறித்த மாணவியை மாணவியின் நண்பர்கள் மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோல் எவ்வாறு கிடைத்தது என கேட்டுள்ளார்கள்.

அப்போதே குறித்த மாணவி மிகவும் சர்வ சாதாரணமாக நெல் கொடுத்து பெற்றோல் வாங்கிய கதையைக் கூறியுள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் ஒருவரிடமிருந்தே குறித்த பெற்றோலை தான் பெற்றதாக அந்த மாணவி தெரிவித்துள்ளார். அத்துடன் தனது நண்பிக்கும் பேர்த்டே பரிசாக 2 லீற்றர் பெற்றோலும் கொடுத்து அசத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பண்டமாற்று முறை என்பது இதுதானா என குறித்த மாணவியின் நண்பர்கள் தங்களது பேஸ்புக் பதிவுகளில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Latest news

நாளை வேலை நிறுத்தம் செய்யவிருக்கும் 200 குவாண்டாஸ் விமானிகள்

சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை அடுத்த 24 மணி நேரத்தில் நிறைவேற்றாவிட்டால், அடுத்தகட்ட தொழில்துறை நடவடிக்கை எடுக்கப்படும் என குவாண்டாஸ் விமானிகள் தெரிவித்துள்ளனர்.

4வது மாதத்திற்கான வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை

இன்று நடைபெற்ற பெடரல் ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழு கூட்டத்தில் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. அதன்படி, ரொக்க...

தொழிற்பயிற்சி கல்விக்கு $37.8 மில்லியன் கூடுதல் ஒதுக்கீடு

தொழிற்பயிற்சி கல்வி மேம்பாட்டிற்காக கூடுதலாக 37.8 மில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. செய்தியாளர்களிடம்...

Yes23 பிரச்சாரத்திற்கு ஒரு எச்சரிக்கை

வாக்கெடுப்பில் முன்மொழிவுக்கு ஆதரவாக செயல்படும் Yes23 பிரச்சாரத்திற்கு தேசிய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, தேர்தல் ஆணையத்தின்...

கிழக்கு விக்டோரியாவில் அபாய நிலையில் உள்ள காட்டுத் தீ

கிழக்கு விக்டோரியாவின் பல பகுதிகளில் காட்டுத்தீ அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. பல புறநகர் பகுதிகளில் உள்ள மக்களை விரைவில்...

போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு இளைஞர் சமூகத்திற்கு இல்லை என தெரியவந்துள்ளது

அவர்கள் பயன்படுத்தும் போதைப்பொருள் தொடர்பில் இந்த நாட்டில் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லை என கணக்கெடுப்பு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.