Newsஇலங்கைப் பிரச்சனை தொடர்பாக விசிக தலைவரால் சமர்ப்பிக்கப்பட்ட கடிதம்

இலங்கைப் பிரச்சனை தொடர்பாக விசிக தலைவரால் சமர்ப்பிக்கப்பட்ட கடிதம்

-

கடிதத்தின் தமிழாக்கம்:

இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் தலையீடு பாத்காப்பு நலன்களையும் பொருளாதார நலன்களையும் சார்ந்ததாக இருக்கக்கூடாது. அந்த நாட்டின் மக்களுடைய நலன் சார்ந்ததாக இருக்கவேண்டும். விசிக சார்பில் இந்திய அரசின் கவனத்துக்கு பின்வரும் விஷயங்களை முன்வைக்கிறோம்:

  1. இலங்கையில் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாக ஒரு இடைக்கால அரசு அமைப்பதற்கு இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்.
  2. இடைக்கால அரசில் சிங்களவர்களின் பிரதிநிதிகள், தமிழர் பிரதிநிதிகள், மலையகத்தில் உள்ளவர்களின் பிரதிநிதிகள், முஸ்லிம்களின் பிரதிநிதிகள் பங்குபெறுவதை உறுதி செய்யவேண்டும்.
  3. ராணுவத்தையும், அடக்குமுறை சட்டங்களையும் பயன்படுத்துவதை இலங்கையின் தற்காலிக அதிபர் கைவிட வலியுறுத்தவேண்டும்.
  4. இலங்கை மக்களின் விருப்பம்போல வல்லுநர்கள், அறிவுஜீவிகளைக்கொண்ட குழு ஒன்றை அமைத்து அதன் வழிகாட்டுதலில் இடைக்கால அரசு செயல்பட வேண்டும்.
  5. அயல்நாடுகளிலிருந்து ராணுவ உதவி பெறுவதை தவிர்க்குமாறு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்.
  6. இலங்கையின் பொருளாதார சிக்கலைத் தீர்ப்பதற்கு இடைக்கால திட்டம் ஒன்றை தயாரிக்க இந்திய அரசு உதவ வேண்டும்.
  7. இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் உள்ளவாறு தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை உறுதி செய்ய இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்
  8. தமிழ்நாட்டு மீனவர்களை தாக்கும் போக்கை நிறுத்தவேண்டுமென இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்.
  9. 2022 செப்டம்பரில் நடைபெறவுள்ள UNHRC கூட்டத்தில் 2009 இல் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு நீதி கிடைப்பதற்கான முயற்சிகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்
  10. இந்திய அரசு 2009 இல் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு உடன்படுமாறு புதிதாக அமையும் அரசை வலியுறுத்த வேண்டும். ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்தவும் வலியுறுத்த வேண்டும்.

Latest news

வாடிக்கையாளர்களிடமிருந்து சூப்பர் மார்க்கெட் தொழிலாளர்களைப் பாதுகாக்க ஒரு புதிய திட்டம்

நியூசிலாந்தின் Woolworths பல்பொருள் அங்காடி ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து வரும் வன்முறைச் செயல்களில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள பாடி கேமராக்களை அணியும் புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த...

வேகமாக வெப்பமடையும் ஐரோப்பா கண்டம்

உலகில் ஐரோப்பா மிக வேகமாக வெப்பமடையும் கண்டமாக மாறிவருவதாக ஐ.நா.வின் உலக வானிலை மையம் (WMO) மற்றும் ஐரோப்பிய யூனியனில் காலநிலை முகமை இணைந்து வெளியிட்ட...

எலோன் மஸ்க்கின் நல்லறிவு குறித்து பிரதமரின் அறிக்கை

சிட்னி தேவாலயத்தில் நடந்த கத்திக்குத்து காட்சிகளை அகற்ற எலோன் மஸ்க் மறுத்துவிட்டதாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் குற்றம் சாட்டியுள்ளார். இ-பாதுகாப்பு ஆணையர் கோரியபடி ட்விட்டர் அகற்றாததால் தொடர்புடைய...

தைவானில் ஏற்பட்டுள்ள 80க்கும் மேற்பட்ட நிலநடுக்கம்

தைவானில் இன்று காலை மேலும் ஒரு தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டது, அங்கு சமீபத்தில் வலுவான நிலநடுக்கம் காரணமாக 13 பேர் இறந்தனர். யுனைடெட் ஸ்டேட்ஸ் புவியியல் ஆய்வின்...

தைவானில் ஏற்பட்டுள்ள 80க்கும் மேற்பட்ட நிலநடுக்கம்

தைவானில் இன்று காலை மேலும் ஒரு தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டது, அங்கு சமீபத்தில் வலுவான நிலநடுக்கம் காரணமாக 13 பேர் இறந்தனர். யுனைடெட் ஸ்டேட்ஸ் புவியியல் ஆய்வின்...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் ஒருவகை நோயின் தாக்கம்

வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஆஸ்திரேலியர்கள் காய்ச்சலுக்கு எதிராக தடுப்பூசி போடுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள். காய்ச்சல் தொற்றுநோய்க்கான பருவம் மீண்டும் வரவிருக்கிறது, மேலும் சில பகுதிகளில் காய்ச்சல்...