இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான முயற்சிக்கு தொடர்ந்து ஆதரவு – இந்தியா

0
366

இலங்கையில் போராட்டக்காரர்களின் ஆவேசத்தை தொடர்ந்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றார். அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார். இந்த சூழலில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. இதனைத்தொடர்ந்து உடனடியாக வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோத்தபய பதவிக்காலமான 2024 வரை ரணில் விக்ரமசிங்கே இலங்கை அதிபராக பதவியில் நீடிப்பார். இந்த நிலையில், இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு இந்திய தூதரகம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ” இலங்கை அரசியலமைப்பின் சரத்துகளுக்கு அமைவாக இலங்கை பாராளுமன்றம் மேன்மைதங்கிய ரணில் விக்கிரமசிங்க அவர்களை இலங்கை ஜனாதிபதியாக இன்றைய தினம் தெரிவு செய்துள்ளது. இலங்கையின் நெருங்கிய நண்பனாகவும் அயல்நாடாகவும்,சகஜனநாயக அரசு என்ற ரீதியிலும் ஜனநாயக முறைமைகள் மற்றும் பெறுமானங்கள், நிறுவனமயப்படுத்தப்பட்ட அமைப்புகள் மற்றும் அரசியலமைப்பு ரீதியான கட்டமைப்பூடாக ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கான இலங்கையர்களின் முயற்சிகளுக்கு தொடர்ந்தும் நாம் ஆதரவாக இருப்போம்.” என்று கூறியுள்ளது.

Previous articleஒரே வருடத்தில் இந்தியாவை துறந்து வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 1 லட்சம் இந்தியர்கள்
Next articleரணில் விக்ரமசிங்கே நாளை காலை பதவியேற்பு என தகவல்