Newsபுதிய ஜனாதிபதி விடுத்த அழைப்பு!

புதிய ஜனாதிபதி விடுத்த அழைப்பு!

-

இலங்கையில் நிலவரத்தைப் புரிந்துக் கொண்டு, இனியும் பிரிந்து செயற்படாமல் அனைவரும் ஒன்றிணைந்து பிரச்சினைகளுக்குத் தீர்வினைக் காண முன்வரவேண்டும் என்று இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

எனவே, என்னுடன் இணைந்து போட்டியிட்ட டளஸ் அழகப்பெரும மற்றும் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நான் இணைந்து பணியாற்ற வருமாறு பகிரங்கமாக அழைப்பு விடுக்கிறேன்.

அதேபோன்று, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் நாம் அழைப்பு விடுக்கிறோம்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன்.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் அழைப்பு விடுக்கிறேன். நாம் பிரிந்து செயற்பட்ட காலம் இத்தோடு முடிவுற்றுவிட்டது.நாம் இனிமேல் ஒன்றாக பயணிக்க வேண்டும்.

நாளை முதல் அனைத்துத் தரப்பினருடனும் பேச்சு நடத்த நாம் தயாராகவே உள்ளோம் என ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து, நாடாளுமன்றில் அவர் ஆற்றிய விசேட உரையின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Latest news

சீனாவில் வலம்வரும் புதுவகை பீட்சா

வித்தியாசமான உணவு வகைகள் தயாரிப்பு குறித்த காணொளிகள் இணையத்தில் வெளியாகி அதிகளவில் பகிரப்படும். அவற்றில் சில உணவுகள் வரவேற்பும், சில உணவுகள் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகும். அந்த...

ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் புலம்பெயர்ந்தோருக்கான புதிய சட்டம் குறித்த அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் பணியிடங்களில் பணிபுரியும் புலம்பெயர்ந்தோர் தொடர்பாக தற்போதுள்ள சட்டங்கள் குறித்து ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, புலம்பெயர்ந்தோரின் விசா நிலையை கருத்தில் கொண்டு...

ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள வெப்ப மண்டல சூறாவளி!

ஆஸ்திரேலியாவின் முதல் வெப்ப மண்டல சூறாவளி இந்த வாரம் தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது . இதன்படி, அவுஸ்திரேலியாவின் வடமேற்கு கடற்பகுதியில் இந்த...

குறைக்கப்படும் TSS விசாவிற்கு தேவையான அனுபவ காலம்!

Temporary Skill Shortage (TSS) விசாவைப் பெறுவதற்குத் தேவையான 2 வருட அனுபவம் நவம்பர் 23, 2024 முதல் ஒரு வருடமாக குறைக்கப்படும் என்று ஆஸ்திரேலிய...

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் நிகழ்ந்த சோகம் – 10 ஆண்டுகள் பூர்த்தி

தலையில் பந்து தாக்கியதில் உயிரிழந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் வீரர் பில் ஹியூஸ் இறந்து இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகிறது. 2014 ஆம் ஆண்டு நியூ சவுத்...

ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள வெப்ப மண்டல சூறாவளி!

ஆஸ்திரேலியாவின் முதல் வெப்ப மண்டல சூறாவளி இந்த வாரம் தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது . இதன்படி, அவுஸ்திரேலியாவின் வடமேற்கு கடற்பகுதியில் இந்த...