இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக திரௌபதி முர்மு தேர்வு

0
431

இந்தியாவின் 15ஆவது ஜனாதிபதி தேர்வுக்கான வாக்குப்பதிவு ஜுலை 18 ம் தேதி நடந்தது.டெல்லியில் நாடாளுமன்றத்திலும், மாநிலங்களின் சட்டமன்றங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற முடிந்து வாக்கு பெட்டிகள் நாடாளுமன்றம் வளாகம் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தலில் நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் 727 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 9 சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்க தகுதி பெற்று இருந்தனர். ஆனால், 719 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 9 சட்டமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் வாக்களித்தனர்.

வாக்கு எண்ணிக்கையின் போது நாடாளுமன்றத்தின் செயலாளர், வேட்பாளரின் பிரதிநிதி ஒருவர் மற்றும் உதவியாளர்கள் உடனிருப்பர் . வாக்கு எண்ணிக்கையின் போது இந்திய தேர்தல் ஆணையத்தால் அனுமதி வழங்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு வாக்கு எண்ணிக்கையின் முடிவுகளை காண்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் ஆரம்பம் முதலே பாஜக வேட்பாளர் திரௌபதி முர்மு தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். வாக்கு எண்ணிக்கையில் 2-வது சுற்று வரை முன்னிலையில் இருந்த திரௌபதி முர்மு 3-வது சுற்றில் 50 சதவீத வாக்குகளை கடந்தார். மொத்தமாக திரௌபதி முர்மு 5,77,777 வாக்குகளையும் எதிர்கட்சிகள் வேட்பாளர் யஷ்வந்த சின்ஹா 2,61,062 வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதன் மூலம் இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் ஜனாதிபதியாகி உள்ளார் என்ற வரலாற்று பெருமையை திரௌபதி முர்மு பெற்றுள்ளார்.

இந்திய வரலாற்றிலேயே பழங்குடியின பெண் ஒருவர் நாட்டின் ஜனாதபதி ஆகி இருப்பது இதுவே முதல் முறையாகும். அவர் பல நாடுகளின் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Previous articleஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு ரூ.5589.78 கோடி மதிப்பிலான எரிபொருள் விநியோகம்
Next articleஇலங்கையின் அடுத்த பிரதமராக தினேஷ் குணவர்தனாவை நியமிக்க வாய்ப்பு?