அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா பாதிப்பு

0
344

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ், தொடர்ந்து வீரியத்துடன் பரவி வருகிறது. இதனால், கொரோனா வழிகாட்டுதல்களை உலக நாடுகள் பின்பற்றுவதை தவிர்க்க கூடாது என உலக சுகாதார அமைப்பும் வலியுறுத்தி வருகிறது. சாமானிய மக்கள் முதல் பெரும் உலக தலைவர்கள் வரை கொரோனா பாதிப்புக்கு ஆட்படாதவர்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கும் பரவும் தன்மையுடன் தொற்று பரவி வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளுடன் ஜோ பைடனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தலில் இருந்தபடியே தனது அனைத்து பணிகளையும் ஜோ பைடன் மேற்கொள்வார் எனவும் அமெரிக்க அதிபர் அலுவலகமான வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசியை முழுமையாக போட்டுக்கொண்டுள்ள ஜோ பைடன், இரண்டு முறை பூஸ்டர் டோஸ் தடுப்பூசியையும் செலுத்தியுள்ளார். ஜோ பைடன் ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்தான பாக்ஸ்லோவிட் மாத்திரையையும் போட தொடங்கியிருப்பதாக வெள்ளை மாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஉலக சாதனை படைத்திருக்கும் பார்த்திபனுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து
Next articleஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு ரூ.5589.78 கோடி மதிப்பிலான எரிபொருள் விநியோகம்