Newsஅனைத்துலக நாட்டு தூதரகங்களிடம் அம்புலன்ஸ் உதவி கேட்ட போராட்டக்காரர்கள்

அனைத்துலக நாட்டு தூதரகங்களிடம் அம்புலன்ஸ் உதவி கேட்ட போராட்டக்காரர்கள்

-

கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் போராட்டக்காரர்கள் மீது படையினர் நடத்திய தாக்குதலில் காயமடைந்தோரை ஏற்றிச் செல்வதற்காக விரைந்த அம்புலன்ஸ் வாகனங்களை படையினர் தடுத்து நிறுத்தியதனையடுத்து அனைத்துலக நாட்டு தூதரகங்களிடம் போராட்டக்கார்கள் உதவி கேட்டதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காலி முகத்திடலில் அரச தலைவர் செயலகத்துக்கு முன்பாக கடந்த பல மாதங்களாக போராட்டம் நடத்தி வந்த போராட்டக்காரர்கள் இன்று வெள்ளிக்கிழமை படைத்தரப்பினரால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

அதிகாலை 1:30 மணியளவில் நுழைந்த காவல்துறையினர், சிறப்பு அதிரடிப்படையினர் உள்ளிட்ட முப்படையினர் அரச தலைவர் செயலகத்துக்கு முன்பாக போராட்டம் நடத்தியோர் மீது கடும் தாக்குதல் நடத்தி பலரை கைது செய்தும் காயப்படுத்தியும் உள்ளனர்.

போராட்டக்காரர்களின் கூடாரங்கள் அடித்து நொருக்கப்பட்டதுடன், 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளனர்.

இதில் காயமடைந்த போராட்டக்காரர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக விரைந்த அம்புலன்ஸ் வாகனங்களை படைத்தரப்பினர் வீதிகளில் தடுத்து நிறுத்தியுள்ளனர்

இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் படையினரால் தாம் முற்றுகையிடப்பட்ட காட்சியை சமூக வலைத்தளங்கள் ஊடாக அனைத்துலக நாட்டு தூதரகங்களுக்கு அனுப்பி, காயப்பட்ட போராட்டக்காரர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதற்கு அம்புலன்ஸ் வாகனங்களை அனுப்பி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

இதனையடுத்து, அனைத்துலக நாட்டு தூதரக அதிகாரிகள் படைத்தரப்பின் உயரதிகாரிகளுக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு காயமடைந்தோரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு அம்புலன்ஸ் வாகனங்களை சம்பவ இடத்துக்கு செல்ல அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

படைத்தரப்பினர் அனுமதி வழங்கியதனையடுத்து, காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்வதற்கு அம்புலன்ஸ் வாகனங்கள் அப்பகுதிக்கு விரைந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவின் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் தொடர்பில் நடக்கும் மோசடி

ஆஸ்திரேலியாவின் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் மிகவும் பொதுவானதாகி வருகிறது. அதனுடன், மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. டிஜிட்டல் ஓட்டுநர் உரிம விண்ணப்பங்கள் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாதுகாப்பு தரநிலைகளை...

அழிந்துவரும் மூன்று கங்காரு இனங்கள் அடையாளம்

ஃபிளிண்டர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று அழிந்து வரும் மூன்று வகையான கங்காருக்களை அடையாளம் கண்டுள்ளது. 5 மில்லியன் முதல் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக நம்பப்படும்...

நாய்களுக்கும் எளிதான ஒரு சிறப்பு விமான நிறுவனம்

அமெரிக்க நிறுவனம் ஒன்று நாய்களுக்காக மட்டுமே புதிய விமான சேவையை தொடங்கவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வரும் மே 23ம் தேதி பார்க் ஏர் நிறுவனம்...

ஆஸ்திரேலியாவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் குழு

மேற்கு ஆஸ்திரேலியாவின் ஆசிரியர் தொழில் சங்கங்கள் சம்பள உயர்வு உட்பட பல நிபந்தனைகளின் அடிப்படையில் தொழில்முறை நடவடிக்கையை அணுகுவதாக கூறுகின்றன. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 22ஆம் திகதி வேலைநிறுத்தப்...

நாய்களுக்கும் எளிதான ஒரு சிறப்பு விமான நிறுவனம்

அமெரிக்க நிறுவனம் ஒன்று நாய்களுக்காக மட்டுமே புதிய விமான சேவையை தொடங்கவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வரும் மே 23ம் தேதி பார்க் ஏர் நிறுவனம்...

ஆஸ்திரேலியாவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் குழு

மேற்கு ஆஸ்திரேலியாவின் ஆசிரியர் தொழில் சங்கங்கள் சம்பள உயர்வு உட்பட பல நிபந்தனைகளின் அடிப்படையில் தொழில்முறை நடவடிக்கையை அணுகுவதாக கூறுகின்றன. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 22ஆம் திகதி வேலைநிறுத்தப்...