Breaking Newsஎனக்கு எதிராக செயற்படுகின்றீர்களா?: இந்தியாவிடம் நேரடியாக கேட்டறிந்த ரணில்

எனக்கு எதிராக செயற்படுகின்றீர்களா?: இந்தியாவிடம் நேரடியாக கேட்டறிந்த ரணில்

-

அரச தலைவர் தேர்தலில் தனக்கு எதிராக இந்தியா செயற்படுகின்றதா என்று தொலைபேசி வாயிலாக ரணில் விக்கிரமசிங்க கேட்டறிந்து கொண்டதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியான பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்:

ரணில் மீது இந்தியா கோபத்தில் இருப்பதாகவும், ரணிலால் அவர்களுக்கு பெரிய பிரச்சனை இருப்பதாகவும் அரசியல் களத்தில் ஒரு வதந்தி பரவியது.

இந்த வதந்தி ரணில் தொடர்பான தீர்மானங்களை எடுப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் பெரிதும் பாதித்தது.

ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் ரீதியாக சில கடினமான முடிவுகளை எடுக்கும் போது, அந்த முடிவுகளின் பின்னணியில் இந்தியா இருப்பதுதான் பிரதான காரணமாகும். அதன்படி, இந்த வதந்தி தனக்கு பாதகமானது என்பதை ரணில் உடனடியாக உணர்ந்து, அதைச் சரி பார்க்க, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாக அதிகாரப்பூர்வமற்ற வட்டாரங்களில் இருந்து எமது புலனாய்வு தகவல்கள் ஊடாக அறிந்திருந்தோம்.

தமிழக அரசியல் கட்சிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, சிறிலங்காவின் நிலைமை குறித்து ஆலோசிக்க இந்தியா ஏற்கனவே அனைத்துக் கட்சி மாநாட்டைக் கூட்டியிருந்த நிலையில், ரணில் முதலில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருடன் கலந்துரையாடி, இந்த விவகாரம் குறித்து நேரில் விசாரிக்க நடவடிக்கை எடுத்தார்.

ரணிலின் முயற்சிகளை புரிந்து கொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் உடனடியாக சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லேவை அழைத்து ரணிலை சந்தித்து கலந்துரையாடுமாறு தெரிவித்தார்.

உடனடியாக இந்திய தூதுவர் ரணிலைச் சந்தித்து சிறிலங்காவின் அரசியல் விவகாரங்களில் இந்திய அரசாங்கம் தலையிடாது என்பதைத் தெரிவிக்க நடவடிக்கை எடுத்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

40 வருடத்தில் 12 முறை விவாகரத்து – $342,000 மோசடியில் ஈடுபட்ட அவுஸ்திரேலிய தம்பதி

அவுஸ்திரேலிய தம்பதியினர் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக போலி திருமணங்கள் மற்றும் விவாகரத்து மூலம் மோசடியில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவை சேர்ந்த தம்பதியினர் ஒருவர், 40 ஆண்டுகளுக்கும்...

படகு கவிழ்ந்ததில் 25 பேர் பலி

மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவின் பெமி என்ற ஆற்றில் படகு கவிழ்ந்து 25 பேர் உயிரிழந்துள்ளனர். மைடொபி மாகாணம் இங்கான்கோ நகரில் இருந்து அண்டை நகருக்கு பெமி...

7 ​​நாள் அவசரகால நிலையை அறிவித்துள்ள Vanuatu அரசாங்கம்

டிசம்பர் 17 அன்று போர்ட் விலா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து Vanuatu அரசாங்கம் 7 ​​நாள்...

விரைவில் ஆஸ்திரேலியாவுக்கு வரும் Bluey: The Movie

உலகப் புகழ்பெற்ற Bluey-இன் கார்ட்டூன் 'Bluey: The Movie'யின் Animation படம் 2027-ல் ஆஸ்திரேலியாவில் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, Bluey's World அனுபவம் இப்போது பிரிஸ்பேர்ணில்...

விரைவில் ஆஸ்திரேலியாவுக்கு வரும் Bluey: The Movie

உலகப் புகழ்பெற்ற Bluey-இன் கார்ட்டூன் 'Bluey: The Movie'யின் Animation படம் 2027-ல் ஆஸ்திரேலியாவில் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, Bluey's World அனுபவம் இப்போது பிரிஸ்பேர்ணில்...

ஆஸ்திரேலியாவில் கம்பளி உற்பத்தி குறைவதற்கான அறிகுறிகள்

அடுத்த நிதியாண்டின் நடுப்பகுதியில், ஆஸ்திரேலிய கம்பளி உற்பத்தியில் கடும் சரிவு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு இந்நிலமை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கம்பளி...