Breaking News டலசிடம் பேரம் பேசிய நாமல்

டலசிடம் பேரம் பேசிய நாமல்

-

அரச தலைவர் தேர்தலில் போட்டியிட்ட டலஸ் அழகப்பெருமவிடம் நாமல் ராஜபக்ச பேரம் பேசியதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியான பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்:

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பில் பாரிய பிரச்சினை எழுந்த போது நாமல் தலையிட்டு டலசிடம் அருமையான திட்டமொன்றை முன்வைத்திருந்தார்.

அங்கு, டலசிடம் பேச்சு நடத்திய நாமல், ரணில் நிச்சயம் அரச தலைவராக வருவார் என்றும், அதன் பின்னர் 19 ஆவது திருத்தச் சட்டம் போன்ற அரசியல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும், அதன் பின்னர் பிரதமர் பதவி டல்லசுக்கு வழங்கப்படுமெனவும், பிரதமர் பதவிக்குரிய அதிகாரங்கள் பிரதமருக்கே வழங்கப்படும் எனவும் நாமல் தெரிவித்திருந்தார்.

ஆனால், நாமல் கொண்டு வந்த இந்த திட்டத்தில் டலஸ் சிறிதும் ஆர்வம் காட்டவில்லை. அதன் பிரகாரம், பொதுஜன பெரமுன உறுப்பினர்களிடம் ரணிலுக்கு வாக்களிக்குமாறு கோரி நாமல் தொலைபேசியில் அழைப்பு விடுக்க தொடங்கினார்.

ஆனால், நாமலின் தொலைபேசி அழைப்புக்களுக்கு பல மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், தொடர்ந்து மூத்த உறுப்பினர்களுக்கு நாமலால் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்ள முடியவில்லை.

அதேபோன்று அழைப்புக்களை மேற்கொள்ள வேண்டாம் என்று பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாமல் தொடர்பாக மூத்த உறுப்பினர்களிடம் முறையிட்டிருந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

சிட்னி அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண் சடலமாக மீட்பு – விசாரணைகள் ஆரம்பம்

மேற்கு சிட்னி அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண்ணின் சடலத்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு காரணம் குடும்ப தகராறு என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா அரசு ஊழியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு இரட்டிப்பு

விக்டோரியாவில் பொதுத்துறை ஊழியர்களுக்கான வருடாந்திர ஊதிய உயர்வு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வருடத்திற்கு 1.5 வீத சம்பள அதிகரிப்புக்கு...

YouTube-இல் அதிரடி மாற்றம்! இனி இந்த வசதியை பயன்படுத்த முடியாது

யூடியூபில் ஸ்டோரீஸ் என்ற வசதி நீக்கப்பட உள்ளதாக, கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.கூகுள் நிறுவனத்தில் பிரபலமான செயலியாக அறியப்பட்டும் யூடியூப்பில், ஸ்டோரீஸ் என்ற வசதி...

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இலங்கையர் என்ற பெருமையை பெற்ற ஈழத் தமிழர்

இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் 46 வயதான விவேகானந்தன் துஷியந்தன் , முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை 8849 மீற்றர் உயரமான...

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இலங்கையர் என்ற பெருமையை பெற்ற ஈழத் தமிழர்

இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் 46 வயதான விவேகானந்தன் துஷியந்தன் , முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை 8849 மீற்றர் உயரமான...

பெர்த் மருத்துவர்களுக்கு ChatGPT தடை

AI அல்லது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பெர்த் நகரத்தில் உள்ள மருத்துவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் தனிப்பட்ட...