அஜித்தை எதிர்பார்த்து சமயபுரம் கோவிலில் திரண்ட ரசிகர்கள்… இன்ப அதிர்ச்சி கொடுத்த இளம் நடிகை

0
392

சக்தி ஸ்தலங்களில் உலகப் பிரசித்திப் பெற்றது திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில்.இக்கோயிலில், ஏழு நிலை கொண்ட புதிய ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு, கடந்த ஜூலை 6ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலர் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், நேற்றிரவு, 8 மணிக்கு நடிகர் அஜித்குமார், சாமி தரிசனம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் பரவியது.அதையடுத்து, ஏராளமான ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் கோவில் பின் வாசலில் அஜித்குமாரை காண ஆவலுடன் திரண்டனர்.தகவலறிந்த சமயபுரம் காவல்துறையினர் கூடுதல் போலீசாருடன் பாதுகாப்புப் பணியை தீவிரப்படுத்தினர்.ஆனால், இரவு, 9 மணி வரை நடிகர் அஜித்குமார் கோவிலுக்கு வரவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.

அதேநேரத்தில், ‘பிக்பாஸ்’ புகழ், பிரபல திரைப்பட நடிகை யாஷிகா ஆனந்த் கோயிலில் தரிசனம் செய்து விட்டு வெளியே வந்தார்.அஜித்குமார் வருவார் என காத்திருந்த ரசிகர்கள், யாஷிகாவை பார்த்தவுடன் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். அவருடன் செல்பி எடுப்பதற்கு முண்டியடித்தனர்.சுமார் ஒரு மணி நேரமாக அவரை எங்கும் நகர விடாமல் சூழ்ந்த ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Previous articleஉலகை அச்சுறுத்தும் காட்டுத்தீ..! தீயணைப்பு பணிகள் தீவிரம்..!
Next articleஇந்தியாவில் இருத்து விசா இல்லாமல் 60 நாடுகளுக்குப் பயணம் செய்யலாம்