உலகை அச்சுறுத்தும் காட்டுத்தீ..! தீயணைப்பு பணிகள் தீவிரம்..!

0
231

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயால், 6 ஆயிரத்து 555 ஏக்கர் நிலங்கள் தீயில் எரிந்து சேதமடைந்து உள்ளன. இந்த காட்டுத்தீ சாலையில் இருந்த வாகனங்கள் மற்றும் பொருட்களை சேதப்படுத்தியுள்ளது. கடந்த இரு வாரங்களில் அப்பகுதில் ஏற்பட்ட மூன்றாவது காட்டுத்தீ இதுவாகும். கிரீஸ் நாட்டின் வெஸ்போஸ் தீவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள் சேதமடைந்தன. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். பலத்த காற்று வீசுவதால், தீ பரவல் தீவிரமான நிலையில், தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.