யாழ்ப்பாணத்தில் இருந்து ஆஸ்திரேலியா சென்ற இளைஞன் பெருமை சேர்த்துள்ளார்.
படகில் ஆஸ்திரேலிய வந்து கடற்படை உத்தியோகத்தராகி தன் பெற்றோருக்கும் ஏனைய புகலிடக்கோரிக்கையாளர்களுக்கும் தமிழ் இளைஞன் ஒருவர் பெருமை சேர்த்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருக்கு ஆஸ்திரேலியாவுக்கு 8 வயதில் தன் தாயாருடன் வந்த பிரகாஸ் இளங்கோ என்பவரே அவுஸ்திரேலிய கடற்படை உத்தியோகத்தராகியுள்ளார்.
பிரகாஸ் கடற்படை அதிகாரியாக பட்டம் பெற்றுள்ள நிலையில் அவருக்கு தற்போது 20 வயதாகின்றது.
இதுபோன்ற சவால்கள் நிறைந்த தொழில்களில் இணைந்து தமிழ் இனத்துக்கும் அகதிகளாக குடியேறுவோருக்கும் பெருமை சேர்த்த பிரகாஸ் இளங்கோவுக்கு பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
பிரகாஸ் மற்றும் அவரது தாயார் 2009ஆம் ஆண்டு உள்நாட்டு போரில் தப்பி ஆஸ்திரேலியாவுக்கு வந்து குடியேறியுள்ள நிலையில் இன்று அனைவரையும் அவர் பெருமையடைய செய்துள்ளார்.