News ஸ்ரீலங்கன் விமானத்திற்குள் ஏற்பட்ட பரபரப்பு - திடீரென வெளியேற்றப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்

ஸ்ரீலங்கன் விமானத்திற்குள் ஏற்பட்ட பரபரப்பு – திடீரென வெளியேற்றப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்

-

இலங்கையிலிருந்து டுபாய் நோக்கி பயணிக்க தயாராக இருந்த ஸ்ரீலங்கன் விமான நிலையத்தில் கேல்பேஸ் போராட்டக்காரர் ஒருவர், குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

டனிஸ் அலி என்பவரே விமானத்தின் உள்ளே வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 13 ஆம் திகதி இலங்கை ரூபவாஹினி கூட்டத்தாபனத்தினுள் அத்துமீறி நுழைந்து ஔிபரப்பை சீர்குலைக்க முயன்றவர்களில் முக்கியமானவர் தனிஸ் அலி என்பவராகும்.

இன்றைய தினம் விமானத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாடு செல்ல முற்பட்டபோது, விமானத்தில் இருந்து அவரை இறக்கும் முயற்சியில் குடிவரவு அதிகாரிகள் சிலர் ஈடுபட்டிருந்தனர்.

இலங்கையில் இருந்து டுபாய் செல்லவிருந்த ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபருக்கு எதிராக பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இவ்வாறு அவரை விமானத்தில் இருந்து பலவந்தமாக இறக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

சிட்னி அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண் சடலமாக மீட்பு – விசாரணைகள் ஆரம்பம்

மேற்கு சிட்னி அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண்ணின் சடலத்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு காரணம் குடும்ப தகராறு என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா அரசு ஊழியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு இரட்டிப்பு

விக்டோரியாவில் பொதுத்துறை ஊழியர்களுக்கான வருடாந்திர ஊதிய உயர்வு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வருடத்திற்கு 1.5 வீத சம்பள அதிகரிப்புக்கு...

YouTube-இல் அதிரடி மாற்றம்! இனி இந்த வசதியை பயன்படுத்த முடியாது

யூடியூபில் ஸ்டோரீஸ் என்ற வசதி நீக்கப்பட உள்ளதாக, கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.கூகுள் நிறுவனத்தில் பிரபலமான செயலியாக அறியப்பட்டும் யூடியூப்பில், ஸ்டோரீஸ் என்ற வசதி...

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இலங்கையர் என்ற பெருமையை பெற்ற ஈழத் தமிழர்

இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் 46 வயதான விவேகானந்தன் துஷியந்தன் , முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை 8849 மீற்றர் உயரமான...

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இலங்கையர் என்ற பெருமையை பெற்ற ஈழத் தமிழர்

இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் 46 வயதான விவேகானந்தன் துஷியந்தன் , முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை 8849 மீற்றர் உயரமான...

பெர்த் மருத்துவர்களுக்கு ChatGPT தடை

AI அல்லது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பெர்த் நகரத்தில் உள்ள மருத்துவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் தனிப்பட்ட...