News சோஷலிச சமத்துவக் கட்சியின் தலைவர் காலமானார்!

சோஷலிச சமத்துவக் கட்சியின் தலைவர் காலமானார்!

-

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) இலங்கைப் பிரிவான சோஷலிச சமத்துவக் கட்சி(SEP)யின் தலைவர், மூத்த ட்ரொட்ஸ்கிசவாதியான விஜே டயஸ் இன்று காலை தனது 80ஆவது வயதில் காலமானார்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தலைவரும் உலக சோஷலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் உறுப்பினருமான விஜே டயஸ் இன்று காலை மாரடைப்பு காரணமாக ஜயவர்தனபுர மருத்துவமனையில் காலமானார்.

அன்னாரின் இழப்பு குறித்து ஓர் அறிக்கையை வெளியிட்ட சோஷலிச சமத்துவக் கட்சி, விஜேவின் மரணம் கட்சிக்கும், குறிப்பாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுக்கும், இலங்கை, தெற்காசியா மற்றும் சர்வதேச அளவில் உள்ள தொழிலாள வர்க்கத்துக்கும் பெரும் இழப்பாகும்.

அவர் இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் நலன்களை உள்ளடக்கிய சர்வதேச சோஷலிசத்தின் ட்ரொட்ஸ்கிச கொள்கைகளுக்காக அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஒரு சளைக்காத போராளியாக இருந்தார் எனத் தெரிவித்துள்ளது.

Latest news

13 அடி நீள முதலையை சுட்டு கொன்ற புளோரிடா அதிகாரிகள்

அமெரிக்காவின் தென்கிழக்கில் உள்ள மாநிலம் புளோரிடா. இதன் தலைநகரம் டல்லஹாசீ. இம்மாநிலத்தின் மத்திய மேற்கு பகுதியில் பினாலஸ் கவுன்டி பகுதி அமைந்துள்ளது.

பயணிகள் வசதிகளை மேம்படுத்த குவாண்டாஸிடம் இருந்து $80 மில்லியன்

Qantas Airlines நிறுவனம் உயர்தர வாடிக்கையாளர் சேவையை வழங்கும் நோக்கில் 80 மில்லியன் டொலர்களை ஒதுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜெட்ஸ்டார் விமானத்தில் குடிபோதையில் பயணித்த நபர் – $31,300 அபராதம்

ஜெட்ஸ்டார் விமானத்தில் குடிபோதையில் நடந்து கொண்ட பயணிக்கு $31,300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று மதியம் பெர்த்தில் இருந்து சிட்னிக்கு...

அதிகரிக்கப்படும் ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதற்கான கொடுப்பனவு மற்றும் பணிக்கான போனஸ் இருப்பு தொகை

ஆஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பு தொடர்பான பல திருத்தங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி, பணியாளர்களை விரிவுபடுத்தும் நோக்கில், தற்போது ஓய்வு...

சட்டவிரோத மின்-சிகரெட்டுகளை கட்டுப்படுத்த NSW முடிவு

சட்டவிரோத எலக்ட்ரானிக் சிகரெட் விற்பனை மற்றும் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் சட்டங்களை கடுமையாக்க நியூ சவுத் வேல்ஸ் முடிவு செய்துள்ளது.

மெல்போர்னின் வடக்கே பல பகுதிகளில் லேசான நடுக்கம்

மெல்போர்னின் பல வடக்குப் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மெல்போர்ன் சிபிடியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில்...