Newsஇலங்கைக்கு உதவ தயாராகும் கமல் ஹாசன்!

இலங்கைக்கு உதவ தயாராகும் கமல் ஹாசன்!

-

நலத்திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு உதவுவதற்கு தயாராக உள்ளதாக நடிகரும் இயக்குநருமான பத்ம பூஷன் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கான இலங்கை துணை தூதுவர் டி. வெங்கடேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடிய போது கமல் ஹாசன் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, நடிகர் கமல் ஹாசனை இலங்கைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கான இலங்கை துணை தூதுவர் டி. வெங்கடேஸ்வரனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடிகர் கமல்ஹாசன் உதவி உயர்ஸ்தானிகரை சந்தித்துள்ளார்.

இதன்போது, இலங்கை துணை தூதுவருக்கும் நடிகர் கமல் ஹாசனுக்கும் இடையில் இலங்கையின் சினிமாத்துறை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

திரைப்பட குழுவினர் மற்றும் தியேட்டர் குழுவினருடன் இலங்கைக்கு வருகை தருமாறும் அது இலங்கைக்கான சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் எனவும் இந்தியாவிற்கான இலங்கை துணை தூதுவர் டி. வெங்கடேஸ்வரன் நடிகர் கமல்ஹாசனிடம் தெரிவித்துள்ளார்.

தனது நலத்திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு உதவுவதற்கு தயாராக உள்ளதாகவும் இதன்போது கமல் ஹாசன் இந்திய உதவி உயர்ஸ்தானிகருக்கு தெரிவித்துள்ளார்.

Latest news

மிகப்பெரிய AI செயல்பாட்டின் மூலம் ஆஸ்திரேலியாவில் அரிய விண்கல் கண்டுபிடிப்பு

கர்டின் பல்கலைக்கழகத்தின் Desert Fireball Network-ஐ சேர்ந்த மாணவர்கள் குழு மேற்கு ஆஸ்திரேலியாவின் கோல்ட்ஃபீல்ட்ஸின் தொலைதூரப் பகுதியில் ஒரு விண்கல்லைக் கண்டுபிடித்துள்ளது. இந்த விண்கல் ஒரு முஷ்டி...

ஆஸ்திரேலியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஐக்கிய நாடுகள் சபை

ஆஸ்திரேலியாவில் கைதிகள், கைதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் நடத்தப்படும் விதம் குறித்து ஐ.நா. தூதுக்குழு ஒன்று கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. 12 நாள் பயணத்தின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் ஐ.நா....

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் விமானங்களில் Power Banks-ஐ எடுத்துச் செல்ல தடை

டிசம்பர் முதல் பல புதிய விமானப் பயண விதிகள் அமலுக்கு வரும் என்றும், இது ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளைப் பாதிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விர்ஜின், குவாண்டாஸ்...

Modified மின்-பைக்குகளை தடை செய்யும் விக்டோரியாவின் மெட்ரோ மற்றும் பிராந்திய ரயில் சேவைகள்

பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக விக்டோரியாவின் ரயில் வலையமைப்பில் மாற்றியமைக்கப்பட்ட மின்சார மிதிவண்டிகளுக்கு புதிய தடை விதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 21 முதல், மெட்ரோ மற்றும் பிராந்திய ரயில் சேவைகளில்...

குயின்ஸ்லாந்தில் பிறந்த உலகின் மிகச்சிறிய குழந்தை

குயின்ஸ்லாந்தில் பிறந்த குழந்தைகளிலேயே மிகவும் சிறியதாக சார்லி ஜோன்ஸ் என்ற ஆண் குழந்தை வரலாறு படைத்துள்ளது. அவரது எடை ஒரு கோக் கேனை விடக் குறைவாக, 360...

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவில் உள்ள Brown பல்கலைக்கழகத்தில் உள்ள பொறியியல் கட்டிடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் எட்டு பேர் காயமடைந்தனர். தாக்குதலைத் தொடர்ந்து Ivy...