நலத்திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு உதவுவதற்கு தயாராக உள்ளதாக நடிகரும் இயக்குநருமான பத்ம பூஷன் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கான இலங்கை துணை தூதுவர் டி. வெங்கடேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடிய போது கமல் ஹாசன் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, நடிகர் கமல் ஹாசனை இலங்கைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கான இலங்கை துணை தூதுவர் டி. வெங்கடேஸ்வரனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடிகர் கமல்ஹாசன் உதவி உயர்ஸ்தானிகரை சந்தித்துள்ளார்.
இதன்போது, இலங்கை துணை தூதுவருக்கும் நடிகர் கமல் ஹாசனுக்கும் இடையில் இலங்கையின் சினிமாத்துறை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
திரைப்பட குழுவினர் மற்றும் தியேட்டர் குழுவினருடன் இலங்கைக்கு வருகை தருமாறும் அது இலங்கைக்கான சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் எனவும் இந்தியாவிற்கான இலங்கை துணை தூதுவர் டி. வெங்கடேஸ்வரன் நடிகர் கமல்ஹாசனிடம் தெரிவித்துள்ளார்.
தனது நலத்திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு உதவுவதற்கு தயாராக உள்ளதாகவும் இதன்போது கமல் ஹாசன் இந்திய உதவி உயர்ஸ்தானிகருக்கு தெரிவித்துள்ளார்.