அமெரிக்காவுடன் போர் மூண்டால் அணுஆயுதம் பயன்படுத்தப்படும்.. வடகொரியத் தலைவர் கிம் எச்சரிக்கை

0
412

அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுடன் போர் மூண்டால் தனது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதாக வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் எச்சரித்துள்ளார். 1950-53 கொரியப் போரின் 69வது ஆண்டு நிறைவையொட்டி, போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்திவிட்டு கிம் ஆற்றிய உரையில், தொற்றுநோய் நேரத்தில் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல்களுக்கு மத்தியில் நாட்டில் ஒற்றுமை உயர்த்துள்ளத்தாகப் பேசினார். அதனிடையில் கிம் அணுவாயுத அச்சுறுத்தலை வழங்கியுள்ளார்.

அமெரிக்கா தனது விரோதக் கொள்கைகளை நியாயப்படுத்த வடகொரியாவை கொடூரமானவர்கள் என்று சித்தரிப்பதாக குற்றம் சாட்டினார். வடகொரியாவின் வழக்கமான இராணுவ நடவடிக்கைகள் – அதன் ஏவுகணை சோதனைகள் பற்றிய குறிப்பு போன்ற அம்சங்கள் வட கொரியாவை குறிவைப்பதாக அவர் கூறினார்.தென் கொரியாவின் ஜனாதிபதி யூன் சுக், மே மாதம் பதவியேற்றதில் இருந்து, அமெரிக்காவுடன் இணைந்து இராணுவக் கூட்டணியை வலுப்படுத்தவும், முன்னெச்சரிக்கை தாக்குதல் திறன் உட்பட வட கொரிய அணுசக்தி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் சொந்த திறனை வலுப்பட முயற்சிப்பதாவும் தெரிவித்தார்.

அமெரிக்கா “போர் தடுப்பு என்ற ஒற்றை பணிக்கு ஒருபோதும் மட்டுப்படுத்தப்பட மாட்டார்கள்” . எங்கள் இராணுவம் அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது. அவை அமெரிக்க நிலப்பரப்பு மற்றும் தென் கொரியா இரண்டையும் தாக்கும் தூரத்தில் வைக்கப்பட்டுள்ளது என்றார்.தொற்றுநோய் தொடர்பான எல்லைப் பாதுகாப்பு நிறுத்தங்கள், அமெரிக்கா தலைமையிலான பொருளாதாரத் தடைகள் மற்றும் அவரது சொந்த நிர்வாகமின்மை ஆகியவற்றால் அவரது நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், கிம் அதிக பொது ஆதரவை நாடுவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

நேச நாடுகள் கோடைக்கால பயிற்சிகளை விரிவுபடுத்தத் தயாராகும் நிலையில், வட கொரியா அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு எதிரான அதன் அச்சுறுத்தல்களை தீவிரப்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.சமீபத்திய ஆண்டுகளில், தென் கொரிய மற்றும் அமெரிக்க இராணுவங்கள் கோவிட்-19 பற்றிய கவலைகள் காரணமாக தங்கள் வழக்கமான பயிற்சிகளில் சிலவற்றை ரத்து செய்துள்ளன.

இந்த மே மாதத்தில், வட கொரியாவும் மீண்டும் COVID-19 உறுதியானது. இருப்பினும் அதைக் கையாள நவீன மருத்துவ திறன் இல்லாததால் நோய் மற்றும் இறப்பு அளவு பரவலாக சர்ச்சைக்குரியதாக உள்ளது. அதற்காக அனுப்பப்பட்ட மருத்துவ நிவாரணப் பொருட்களுக்கான அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் சலுகைகளை வட கொரியா நிராகரித்துள்ளது.வடகொரியா மீதான அமெரிக்க விரோதக் கொள்கைகளை கைவிடாவிட்டால், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு திரும்பப் போவதில்லை என்றும் கூறியுள்ளது.

Previous articleஇலங்கைக்கு நிதி உதவி வழங்கப்போவது இல்லை: உலக வங்கி திட்டவட்டம்
Next articleஇளையராஜா இசைப்பள்ளியையும், கமல் ஹாசன் நடிப்புப் பள்ளியையும் துவங்க பிரபல இயக்குநர் விருப்பம்