இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு பாராட்டு தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

0
488

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா கலைநிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்த இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.செஸ் விளையாட்டின் ஒலிம்பிக் என்று அழைக்கப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டி 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கிராமத்தில் உள்ள போர் பாயிண்ட்ஸ் நட்சத்திர ஓட்டலில் நேற்று முன்தினம் தொடங்கியது.இதையொட்டி,போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று முன் முன்தினம் நடைபெற்றது.

இதில், பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய – மாநில அமைச்சர்கள், சர்வதேச செஸ் அமைப்பின் பிரதிநிதிகள், நடிகர்- நடிகைகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.தொடக்கவிழாவின்போது நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 3டி தொழில்நுட்பத்தில் நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகளை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.வெளிநாட்டு கலைஞர்களையும் ஈர்க்கும் வகையில் தொடக்க விழா நிகழ்ச்சிகள் சிறப்பாக அமைந்தது என்று பார்வையாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இதற்காக கலை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்த இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தொடக்க விழா நிகழ்ச்சிகளை நேரில் கண்டு ரசித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விக்னேஷ் சிவனை பாராட்டியுள்ளார்.நிகழ்ச்சி நிறைவு பெற்ற பின்னர் விக்னேஸ் சிவனை தொலைபேசியில் அழைத்த ரஜினி, தொடக்க விழா கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக இருந்தது என கூறி பாராட்டுகளை தெரிவித்து இருக்கிறார். இந்த தகவலை விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நேற்று முன்தினம் தொடங்கிய செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

Previous articleசிற்றுண்டி பிரியரா நீங்கள்..? அப்போ இந்த டிப்ஸ் நிச்சயம் உங்களுக்குதான்
Next articleபோருக்கு மத்தியில் மனைவியுடன் ‘போட்டோஷூட்’ சர்ச்சையில் சிக்கிய உக்ரைன் அதிபர்