நீங்கள் வீட்டில் இருந்து கொண்டோ அல்லது அலுவலகத்திற்கு சென்றோ வேலை செய்யும் போது நாள் முழுவதும் சிற்றுண்டி எடுத்துக்கொள்வது நமது தினசரி உணவில் பெரும் பங்களிப்பை வழங்குகிறது. நாள் முழுவதும் சாப்பிட வேண்டும் என்பதற்காக நாம் எளிதில் கிடைக்கக்கூடிய தின்பண்டங்களையும், ஆரோக்கியமற்ற உணவு முறைகளையும் பின்பற்றுவதால் பலரின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இதற்காக, உங்கள் உணவை எடுத்துகொள்வதில் விழிப்புடன் இருப்பது முக்கியம்.Snaqary ன் தலைமை நிர்வாக அதிகாரியும் நிறுவனருமான Anchal Abrol ஊழியர்களுக்கான சில ஸ்மார்ட் சிற்றுண்டி குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார்.
நாள் முழுவதும் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உடலுக்கு சரியான அளவு நீர் தேவை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் நம்மில் நிறையபேர் அதை எடுத்துக்கொள்வதில்லை. நாள் முழுவதும் தண்ணீர் குடிப்பது நமது உடலுக்கு மிகவும் முக்கியம். நீங்கள் வீட்டிற்குள் இருந்தாலும் உடலில் நீர்ச்சத்து குறையும், ஆதலால் தண்ணீர் பாட்டிலை பக்கத்தில் வைத்துக்கொண்டு தண்ணீரை பருகும் பழக்கத்தை வளர்த்துகொள்வது நல்லது.உங்கள் அன்றாட வாழ்க்கையில் இளநீர், மோர், எலுமிச்சை ஜூஸ் போன்ற ஆரோக்கியமான பானங்களை குடிப்பது ஆரோக்கியமான நீர்சத்துக்கு வழிவகுக்கும்.சர்க்கரை அதிகமாக மற்றும் கார்பனேற்றப்பட்ட பானங்கள் போன்றவற்றில் எச்சரிக்கையாக இருப்பதும் முக்கியம், ஏனெனில் அவை ஆரோக்கியமானவை அல்ல, மேலும் இந்த வகை பானங்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்க கூடியது.
வீட்டில் இருந்து கொண்டே வேலை செய்யும் போது நாம் அலுவலகத்தில் இருப்பதை விட சற்று குறைவாகவே உணவுகளை எடுத்துகொள்கிறோம். எனவே, வீட்டிலிருந்து வேலை செய்யும் நாட்களிலோ அல்லது பிஸியான அலுவலக நாட்களிலோ அதிகமான அளவு அல்லது எளிதில் கிடைக்கக்கூடிய ஆரோக்கியமற்ற பொருட்களை சாப்பிடுவதையும் தவிர்க்கும் வகையில், முன்கூட்டியே செய்து வைக்கப்படும் இந்த உணவைத் திட்டமிட்டுத் தயாரிப்பது முக்கியம்.மேலும் உங்கள் வேலை நாட்களின் அட்டவணையுடன் ஒத்துப்போகும்படி இந்த உணவு அட்டவணையை உருவாக்குங்கள்.
உங்கள் குளிர்சாதனப்பெட்டி அல்லது சமையலறையில் கெட்ட கொழுப்புகள் மற்றும் சர்க்கரை அதிகமுள்ள ஆரோக்கியமற்ற உணவு பொருட்களை சேமிக்க வேண்டாம்.உங்கள் வீட்டிற்கு வெளியே சாப்பிடும் உணவை தவிர்க்க முடிந்தவரை முயற்சி செய்யுங்கள். குறிப்பாக உங்கள் வீட்டில் நாம் எப்போதும் உண்ணும் உணவுகள் அதாவது வேர்க்கடலை, கொண்டைக்கடலை, சாலட்டில் விதைகள் மற்றும் பழங்கள் உள்ளிட்ட உணவுகளுக்கு பதிலாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை மாற்றவும்.
கக்ரா (khakhra), ஜாவர் அல்லது குயினோவா பஃப்ஸ், சோளம், வேகவைத்த பகர்வாடி, வறுத்த மக்கானாக்கள் போன்ற ஆரோக்கியமான சிற்றுண்டி உணவுகளை பின்பற்றலாம். இந்த தின்பண்டங்கள் பசியை போக்க சிறந்தவை. மேலும் உடனடி ஆற்றலை உறுதி செய்யும் புரதம் மற்றும் நார்ச்சத்து நிரம்பியிருப்பதால், நம் உடலின் ஆரோக்கியத்திற்கும் உதவும்.ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவுகள் நம்மை நீண்ட நேரம் வேலை செய்வதற்கும், கவனசிதைவு ஏற்படாமலிருப்பதற்கும் உதவுகிறது.ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்பது, அவர்கள் எடுத்துக்கொள்ளும் உண்வுகளை பொருத்து அமையும், ஏனெனில் இந்த வகை உணவுகள் தூக்கமின்மையை போக்கி நம் மனநிலையை சீராக வைத்துகொள்ள உதவுகிறது.
அடுத்த முறை நீங்கள் பசியுடன் இருக்கும்போதும், ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிட விரும்பும்போது, அந்த உணவு உங்கள் உடலிலும் மனதிலும் ஏற்படுத்தும் விளைவுகளை கவனியுங்கள். அதற்கு பதிலாக, புரதம், நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள், பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு நீங்கள் கவனம் செலுத்துங்கள். முன்கூட்டியே திட்டமிடுவது, சுவையாக தோன்றும் என்பதையும், அலட்சியமாக நாம் இருப்பதை தவிர்க்கும் என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்.வெளியே செல்லும்போது பை அல்லது டிபனில் சாப்பிட திண்பண்டங்களை எடுத்து வைக்க வேண்டாம். அதிகப்படியான ஆரோக்கியமான உணவுகள் கூட நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும், இதனால் சிற்றுண்டிகளுக்கான பகுதிகளை பிரிப்பது அவசியம். போதுமான அளவு சாப்பிடலாம் ஆனால் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தடுப்பது நல்லது.