Breaking Newsரணில் முன் வந்திருக்கும் சவால்..!

ரணில் முன் வந்திருக்கும் சவால்..!

-

சீனாவின் உளவுக் கப்பல், அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அடுத்த மாதம் வருகிறது.

சீன இராணுவத்தின் ‘யுவான் வாங்க் – 5’ என்ற உளவு போர்க் கப்பல், அம்பாந்தோட்டைக்கு ஒகஸ்ட் 11ல் வருகிறது. ஒகஸ்ட் , 17 வரை முகாமிடும் இந்த உளவுக் கப்பல், செயற்கைக் கோள் தகவல்களை சேகரிப்பது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

சீன கப்பலின் நோக்கம் தொடர்பான தகவல்கள் இந்தியாவால் சேகரிக்கப்படுவதுடன், அதனால் ஏற்படக் கூடிய தாக்கங்கள் குறித்தும் இராஜதந்திர மட்டத்தில் விவாதம் நடந்துள்ளது.

சீன கப்பலில் இருந்து, 750 கி.மீ., பரப்பளவுக்கு உள்ள பகுதிகளில் உளவு பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது. அதன்படி, தமிழகத்தின் கல்பாக்கம், கூடங்குளம் உள்ளிட்ட அணு மின்சக்தி நிலையங்கள் மற்றும் அணு ஆய்வு மையங்களை வேவு பார்க்க முடியும் என்று இந்தியா அஞ்சுகிறது..

அதுபோல, கேரளா மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளையும் உளவு பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது. இந்தியாவின் தென் மாநிலங்களில் உள்ள ஆறு முக்கிய துறைமுகங்களையும் சீன கப்பல் உளவு பார்க்கலாமென்பதால் இந்திய பாதுகாப்புத்துறை கடும் விசனமடைந்துள்ளது.

இங்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியில், வேறு எந்த நாடுகளும் உதவ முன்வராத நிலையில், இந்திய அரசு பெரிய அளவில் கடன் வழங்கியும், பொருட்களை அனுப்பியும் உதவியுள்ளது.ஆனால் சீனாவின் கப்பலை தடுக்க இந்தியாவால் முடியவில்லை..

சீனாவின் கப்பலை தடுத்து நிறுத்துவதா அல்லது அதற்கு அனுமதியளித்து இந்தியாவின் எதிர்ப்பினை சம்பாதிப்பதா என்பது ரணிலின் கைகளில் இருக்கிறது.

ஆனால் , ஜனாதிபதிக்கான தெரிவில் தனக்கு ஆதரவளிக்க வேண்டாமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை இந்தியா கேட்டுக்கொண்டதை மனதில் வைத்திருக்கும் ரணில் , அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இதனை கையாள்வாரா அல்லது ‘இதற்கு முன் இருந்த ராஜபக்சக்கள் தான் இதனை அனுமதித்தார்கள் . என்னால் இப்போது ஒன்றும் செய்யமுடியாது’ என்று கையை விரித்துவிடுவாரோ தெரியவில்லை..

ஆனால் என் சிற்றறிவில் சில விடயங்களை சொல்கிறேன்..

  • இனி இப்போதைக்கு இலங்கைக்கு இந்தியா உதவிகளை செய்யாது..
  • இலங்கை மேலும் பல அரசியல் , பொருளாதார நெருக்கடிகளை சந்திக்கப் போகிறது..

ரணிலுக்கு இனித்தான் சத்தியசோதனை ஆரம்பம்..!

நன்றி – சிவராமசாமி

Latest news

தீயணைப்பு சேவை குறித்த ஜெசிந்தாவின் அறிக்கைக்கு பட்ஜெட் அலுவலகம் எதிர்ப்பு

கிராமப்புற தீயணைப்பு சேவைக்கான (CFA) நிதி குறைக்கப்படவில்லை என்ற விக்டோரியன் பிரதமர் ஜெசிந்தா ஆலனின் கூற்றை நாடாளுமன்ற பட்ஜெட் அலுவலகம் (PBO) நிராகரித்துள்ளது. பிரதமர் தனது அரசாங்கம்...

ஸ்பெயினில் இரு அதிவேக தொடருந்துகள் மோதி 21 பேர் பலி

தெற்கு ஸ்பெயினில் இடம்பெற்ற இரண்டு அதிவேக தொடருந்துகள் (High-speed trains) மோதி விபத்துக்குள்ளானதில், குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், 100க்கும்...

உண்மை மற்றும் பொய்களை AI கண்டறிவதில் ஆஸ்திரேலியர்களுக்கு சிக்கல்

காமன்வெல்த் வங்கி நடத்திய புதிய ஆய்வில், ஆஸ்திரேலியர்கள் செயற்கை நுண்ணறிவு தொடர்பான விஷயங்களைப் பற்றிய தங்கள் அறிவை மிகைப்படுத்தி மதிப்பிடுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 89 சதவீத ஆஸ்திரேலியர்கள் AI-உருவாக்கும்...

ஆஸ்திரேலியாவில் விசா பிரச்சனை உள்ளவர்களுக்கு அரசு உதவி

உங்கள் ஆஸ்திரேலிய விசா காலாவதியாகப் போகிறது அல்லது ஏற்கனவே காலாவதியாகிவிட்டால், நீங்கள் குடிவரவு நிலைத் தீர்வு சேவையிலிருந்து (SRSS) உதவி பெறலாம். இந்த சேவை ஆஸ்திரேலியாவில் விசா...

விமானம் இரு முறை அடிலெய்டுக்குத் திரும்பியதால் பயணிகள் 6 மணி நேர தாமதம்

தெற்கு ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் இருந்து Port Lincoln-இற்கு சென்ற QantasLink விமானம் இரண்டு முறை திருப்பி விடப்பட்டதால் பயணிகள் ஆறு மணி நேரம் தாமதமாகினர். அந்த விமானம்...

அமெரிக்காவில் அமைதிப் பேரணிக்குப் பிறகு உலகளவில் புத்த மதத்திற்கு அதிக தேவை

புத்த மதம் இப்போது ஒரு சாதாரண வாழ்க்கை முறையாகக் காணப்படுகிறது என்றும், அது ஒரு சில நாடுகளுக்கு மட்டுமேயான மதமாக மட்டுமல்லாமல், உலகத்துடன் இணக்கமான வாழ்க்கை...