Breaking News ரணில் முன் வந்திருக்கும் சவால்..!

ரணில் முன் வந்திருக்கும் சவால்..!

-

சீனாவின் உளவுக் கப்பல், அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அடுத்த மாதம் வருகிறது.

சீன இராணுவத்தின் ‘யுவான் வாங்க் – 5’ என்ற உளவு போர்க் கப்பல், அம்பாந்தோட்டைக்கு ஒகஸ்ட் 11ல் வருகிறது. ஒகஸ்ட் , 17 வரை முகாமிடும் இந்த உளவுக் கப்பல், செயற்கைக் கோள் தகவல்களை சேகரிப்பது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

சீன கப்பலின் நோக்கம் தொடர்பான தகவல்கள் இந்தியாவால் சேகரிக்கப்படுவதுடன், அதனால் ஏற்படக் கூடிய தாக்கங்கள் குறித்தும் இராஜதந்திர மட்டத்தில் விவாதம் நடந்துள்ளது.

சீன கப்பலில் இருந்து, 750 கி.மீ., பரப்பளவுக்கு உள்ள பகுதிகளில் உளவு பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது. அதன்படி, தமிழகத்தின் கல்பாக்கம், கூடங்குளம் உள்ளிட்ட அணு மின்சக்தி நிலையங்கள் மற்றும் அணு ஆய்வு மையங்களை வேவு பார்க்க முடியும் என்று இந்தியா அஞ்சுகிறது..

அதுபோல, கேரளா மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளையும் உளவு பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது. இந்தியாவின் தென் மாநிலங்களில் உள்ள ஆறு முக்கிய துறைமுகங்களையும் சீன கப்பல் உளவு பார்க்கலாமென்பதால் இந்திய பாதுகாப்புத்துறை கடும் விசனமடைந்துள்ளது.

இங்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியில், வேறு எந்த நாடுகளும் உதவ முன்வராத நிலையில், இந்திய அரசு பெரிய அளவில் கடன் வழங்கியும், பொருட்களை அனுப்பியும் உதவியுள்ளது.ஆனால் சீனாவின் கப்பலை தடுக்க இந்தியாவால் முடியவில்லை..

சீனாவின் கப்பலை தடுத்து நிறுத்துவதா அல்லது அதற்கு அனுமதியளித்து இந்தியாவின் எதிர்ப்பினை சம்பாதிப்பதா என்பது ரணிலின் கைகளில் இருக்கிறது.

ஆனால் , ஜனாதிபதிக்கான தெரிவில் தனக்கு ஆதரவளிக்க வேண்டாமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை இந்தியா கேட்டுக்கொண்டதை மனதில் வைத்திருக்கும் ரணில் , அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இதனை கையாள்வாரா அல்லது ‘இதற்கு முன் இருந்த ராஜபக்சக்கள் தான் இதனை அனுமதித்தார்கள் . என்னால் இப்போது ஒன்றும் செய்யமுடியாது’ என்று கையை விரித்துவிடுவாரோ தெரியவில்லை..

ஆனால் என் சிற்றறிவில் சில விடயங்களை சொல்கிறேன்..

  • இனி இப்போதைக்கு இலங்கைக்கு இந்தியா உதவிகளை செய்யாது..
  • இலங்கை மேலும் பல அரசியல் , பொருளாதார நெருக்கடிகளை சந்திக்கப் போகிறது..

ரணிலுக்கு இனித்தான் சத்தியசோதனை ஆரம்பம்..!

நன்றி – சிவராமசாமி

Latest news

11 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆஸ்திரேலியாவின் பண விகிதம் 4% ஐத் தாண்டியது

11 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியதால் ஆஸ்திரேலியாவின் பணவீக்கம் 04 சதவீதத்தை தாண்டியுள்ளது.

விக்டோரியாவில் ஆரம்பநிலைக்கு கார் பதிவு இலவசம்

விக்டோரியா மாகாணத்தில் தொழிற்பயிற்சி படிக்கும் பயிற்சியாளர்களுக்கு அவர்களின் கார்களை இலவசமாக பதிவு செய்வதற்கான புதிய திட்டத்தை விக்டோரியா மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

மாரிசன் காலத்தில் பல சுகாதாரத் திட்டங்களில் பணம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது

ஸ்காட் மொரிசனின் ஆட்சிக் காலத்தில் சுகாதாரம் மற்றும் வைத்தியசாலைத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான கணக்காய்வு அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் TikTok பயன்பாடு குறித்த முதல் அதிகாரப்பூர்வ அறிக்கை

ஆஸ்திரேலியாவில் TikTok பயனர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலிய மக்கள்தொகையில் 30 சதவீதம்...

ஆஸ்திரேலியாவில் TikTok பயன்பாடு குறித்த முதல் அதிகாரப்பூர்வ அறிக்கை

ஆஸ்திரேலியாவில் TikTok பயனர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலிய மக்கள்தொகையில் 30 சதவீதம்...

37 ஆண்டு சாதனையை முறியடித்த பெர்த் மழை

37 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூன் மாதத்தில் ஒரு நாளில் பெர்த்தில் பெய்த கனமழை கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளது.