Newsஇலங்கையில் பொதுப் போக்குவரத்து சேவையில் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!

இலங்கையில் பொதுப் போக்குவரத்து சேவையில் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!

-

எரிபொருள் நெருக்கடி காரணமாக தற்போது பொதுப் போக்குவரத்து சேவையை பயன்படுத்தும் பயனர்கள் பயணப் பை கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பொது போக்குவரத்து சேவைகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக தனியார் பேருந்து சேவைகள், அரச பேருந்துகள் மற்றும் தொடருந்துகள் என்பவற்றை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு அவற்றில் மக்களின் நெரிசலும் அதிகரித்துள்ளது.

இதன்போது மக்களின் பயணப் பைகள் மற்றும் ஏனைய பெறுமதிமிக்க பொருட்களை கொள்ளையிடுவதற்காக சிலர் பொதுப் போக்குவரத்தில் பயணிக்கின்றனர்.

எனவே, பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துபவர்கள் இந்த விடயம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Latest news

பணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

இஸ்ரேல் – ஹமாஸ்  இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 22ம்...

தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணம் செய்யும் விக்டோரியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, லாவோஸில் உட்கொள்ளப்படும் மதுபானங்களில் சுமார்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

மிகவும் மோசமாகிவரும் போப்பின் உடல்நிலை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புனித திருத்தந்தை பிரான்சிஸின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 88 வயதான போப் பிரான்சிஸுக்கு சுவாசிக்க உதவும்...