Newsகோட்டாபய நாடு திரும்புவதற்கு சரியான நேரம் இதுவல்ல - சர்வதேச ஊடகத்திடம்...

கோட்டாபய நாடு திரும்புவதற்கு சரியான நேரம் இதுவல்ல – சர்வதேச ஊடகத்திடம் கூறிய ரணில்

-

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக்கு திரும்புவதற்கு இது சரியான நேரம் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு நேற்று அளித்த செவ்வியில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி, பொருளாதார வீழ்ச்சி, காரணமாக நாட்டில் இருந்து வெளியேறினார். அவர் தற்போது திரும்பினால், அவரை, வெளியேற்றுவதற்காக அணிதிரண்ட பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் மத்தியில் மீண்டும் எதிர்ப்பலைகளை தூண்டக்கூடும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

அவர் திரும்பி வருவதற்கான உகந்த நேரம் இதுவென தாம் நம்பவில்லை என்று தி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்கு நேற்று அளித்த செவ்வியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

“நாங்கள் ஏற்கனவே அடிமட்டத்தை அடைந்துவிட்டோம் என்று நான் நினைக்கிறேன். நான் சுரங்கப்பாதையின் முடிவில் ஒளியைக் காண்கிறேன்.

நாம் முடிந்தளவு விரைவாக அதை அடைய முயற்சிக்கிறோம்” என்றும் ரணில் தெரிவித்துள்ளார். இலங்கை சுமார் 12 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை இடைநிறுத்தியது.

அத்துடன் 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் கிட்டத்தட்ட 21 பில்லியன் டொலரை செலுத்த வேண்டியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட உடன்பாடு ஆகஸ்ட் மாத இறுதிக்குள் எட்டப்படும் என்று எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எரிபொருள், உணவு மற்றும் உரங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய இறக்குமதிகளுக்காக அடுத்த ஆண்டு மற்றைய மூலங்களிலிருந்து 3 பில்லியன் டொலர்களை இலங்கை பெற வேண்டும்.

அதேநேரம் இலங்கையர்கள் தங்கள் பொருளாதார சூழ்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காண்பதற்கு சில மாதங்கள் ஆகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest news

Update செய்யுமாறு Apple பயனர்களுக்கு அறிவிப்புகள்

Apple கடந்த ஆண்டு iOS 18.6 புதுப்பிப்பை வெளியிட்டது, இதில் 29 அவசர பாதுகாப்பு திருத்தங்கள் அடங்கும். ஹேக்கர்களுக்கு தங்கள் தரவு வெளிப்படுவதைத் தவிர்க்க பயனர்கள் விரைவில்...

டிரம்பால் ஆபத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் சர்வதேச உறவுகள்

ஆஸ்திரேலியாவுக்கான புதிய தூதரை நியமிக்க டொனால்ட் டிரம்ப் தவறியது எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆஸ்திரேலிய பாதுகாப்பு பகுப்பாய்வு நிறுவனத்தின் இயக்குனர் மைக்கேல்...

முக்கிய இடத்தில் போராட்டம் நடத்த அனுமதித்துள்ள நீதிமன்றம்

நியூ சவுத் வேல்ஸ் பாலஸ்தீன போராட்டத்தை ஹார்பர் பாலத்தின் குறுக்கே நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. NSW காவல்துறையும் மாநில அரசாங்கமும் அதைத் தடுக்க முயன்றனர்,...

கிரெடிட் கார்டு போனஸ் காலாவதியாகுமா?

அட்டை பரிவர்த்தனைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி எடுத்த முடிவு குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரிசர்வ் வங்கி சமீபத்தில் அட்டை பரிவர்த்தனைகளுக்கான கூடுதல் கட்டணம் மற்றும் பரிமாற்றக்...

முக்கிய இடத்தில் போராட்டம் நடத்த அனுமதித்துள்ள நீதிமன்றம்

நியூ சவுத் வேல்ஸ் பாலஸ்தீன போராட்டத்தை ஹார்பர் பாலத்தின் குறுக்கே நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. NSW காவல்துறையும் மாநில அரசாங்கமும் அதைத் தடுக்க முயன்றனர்,...

கிரெடிட் கார்டு போனஸ் காலாவதியாகுமா?

அட்டை பரிவர்த்தனைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி எடுத்த முடிவு குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரிசர்வ் வங்கி சமீபத்தில் அட்டை பரிவர்த்தனைகளுக்கான கூடுதல் கட்டணம் மற்றும் பரிமாற்றக்...