விக்டோரியாவில் மோசமான வானிலை குறித்து மாநில மக்கள் விழிப்புடன் இருக்குமாறு மாநில பேரிடர் நிவாரணத் துறை அறிவுறுத்தியுள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் பலத்த காற்று மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதே இதற்குக் காரணமாகும்.
மின்வெட்டுக்கு தயார்படுத்தவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, கையடக்கத் தொலைபேசிகள் உட்பட சார்ஜ் செய்யக்கூடிய அனைத்து மின் சாதனங்களையும் தயார் நிலையில் வைத்திருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இணைய இணைப்பு துண்டிக்கப்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.