Newsகடும் நெருக்கடியில் இலங்கை - ஜனாதிபதி விடுத்த வாக்குறுதி

கடும் நெருக்கடியில் இலங்கை – ஜனாதிபதி விடுத்த வாக்குறுதி

-

நாடு இதுவரை முகம் கொடுக்காத ஓர் பிரச்சினையை இப்போது முகம் கொடுக்கிறது. இந்த நிலையை மாற்ற இன்று நாம் அனைவரும் சேர்ந்து செயல்பட வேண்டும்.நாடாளுமன்றத்தில் அனைவரும் இணைந்து செயல்படுவதே மக்களின் எதிர்பார்ப்பு,பிரிந்து செயற்படுவதன் மூலம் முழு நாடும் பாதிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.நாடாளுமன்றில் ஆற்றிவரும் கொள்கை உரையின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அனைவரையும் இணைந்து செயல்பட அழைக்கிறேன். சர்வகட்சி அரசாங்கம் தொடர்பாக நான் கலந்துரையாடல்களை தொடங்கி இருக்கிறேன். சர்வகட்சி அரசாங்கம் என்பது ஒரு கட்சியாக செயல்படுவது அல்ல.

அனைவரும் இணைந்து செயல்படுகின்ற ஒரு அரசாங்கம் ஆகும். இதன் மூலம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும். சர்வகட்சி அரசாங்கத்தின் அவசியத்தை நான் மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. மேலும் பிரச்சினைகள் வெகு விரைவில் தீர்க்கப்படும் அதேவேளை எமக்கு இந்தியா வழங்கிய உதவிக்கு நாம் நன்றி செலுத்துகிறோம். இன்று எரிபொருள் எமக்கு பெரும் பிரச்சினையாக இருக்கிறது. அதனை தீர்ப்பதற்றக்காக நாம் நடவடிக்கைகளை முன்னெடுக்கிறோம்.

இலங்கையை கட்டியெழுப்ப நீண்ட கால தீர்வுத் திட்டம் தேவைப்படுகிறது. பொருளாதாரத்தை ஸ்திர நிலைக்கு கொண்டு வர வேண்டும். எதிர்காலத்தில் நாம் செய்ய இருக்கும் காரியங்களை இனிவரும் காலங்களில் நாடாளுமன்றத்தில் அறிவிப்போம்.

முன்னைய அரசாங்கம் திருகோணமலை எரிபொருள் சேமிப்பு கிடங்குகளை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய முற்பட்டபோது பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவற்றை இந்தியாவுக்கு விற்பனை செய்வதாக தெரிவித்து அந்த திட்டத்தை கைவிடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர்.

அன்று அந்த அபிவிருத்தி நடவடிக்கை இடம்பெற்றிருக்குமானால் இன்று எரிபொருள் வரிசைகள் இருந்திருக்காது.

மேலும், சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவைகளை ஆரம்பிக்கும் போதும் அப்போதைய எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை இட்டன. இதனூடாக பல மரணங்கள் நிகழும் எனவும் குறிப்பிட்டனர். ஆனால் நாங்கள் அதை தைரியமாக முன்னெடுத்தோம். அதனூடாக இன்று பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.எனவே, நல்ல திட்டங்கள் முன்னெடுக்கும் போது அவற்றை வரவேற்க வேண்டியது நம் அனைவரினதும் பொறுப்பாகும்.

IMF உதவிகளை பெற்று இம்மாதம் முடிவதற்கு முதல் உதவிகளை பெற்றுகொள்வோம். இலங்கையின் வரலாற்றின் படி மீண்டும் அனைத்து நாடுகளுக்கும் அரிசி ஏற்றுமதியாளராக நாம் மாறுவோம். பொருளாதார பிரச்சினைகளினால் வியாபாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் மக்களுக்கு வேலைவாய்ப்புக்கள் இல்லாமல் போயுள்ளன.

ரூபாவின் பெறுமதியும் விழுந்துள்ளது. இதேவேளை சுற்றுலாப்பயணிகள் இந்த மாதத்தில் இலங்கைக்கு வருவார்கள். மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்படுவதுடன், அரசாங்க வீடுகளில் வாழ்பவர்களுக்கு வீட்டிற்கான உறுதிப்பத்திரம் வழங்கப்படும்

இருளுக்கு சாபமிடுவதைவிட, ஒரு விளக்கையாவது ஏற்றுவது , நாட்டுக்காக நான் ஆற்றும் கடமை என நினைத்தேன். அதனால்தான் சவாலை ஏற்றேன். நாட்டை மீட்டெடுக்க ஒன்றிணைவோம். ஆகையால், சர்வக்கட்சி அரசியல் இணையுமாறு அழைப்பு விடுக்கின்றேன்.

ரூபாவின் பெறுமதியும் விழுந்துள்ளது. இதேவேளை சுற்றுலாப்பயணிகள் இந்த மாதத்தில் இலங்கைக்கு வருவார்கள். மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்படுவதுடன், அரசாங்க வீடுகளில் வாழ்பவர்களுக்கு வீட்டிற்கான உறுதிப்பத்திரம் வழங்கப்படும்.

எமது பொருளாதாரம் ஏன் விழுந்தது, அதற்கான காரணம் என்ன என்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். காலத்துக்கு காலம் நபருக்கு நபர் ஏற்றல் போல் பொருளாதார கொள்கைகளை மாற்றுவது நல்லதா என்பதை பார்க்க வேண்டும். நிலையான பொருளாதாரம் 2026இற்குள் நிறுவப்பட வேண்டும்.

நீண்ட கால திட்டங்கள் என்னால் கையாளப்பட்டு வருகின்றன. நான் மற்ற அரசியல்வாதிகளைப் போல் அல்ல, நாட்டின் எதிர்காலத்திற்காக உழைக்கிறேன். நாம் ஒன்றாக இணைந்து இந்த நிலையை மாற்ற வேண்டும். அணைத்து நாடுகளுடனும் இணைந்து நாம் வேலை செய்வோம்.

அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் குறித்து மக்கள் ஏமாந்து போய் இருக்கிறர்கள். இதனால் தான் அவர்கள் ஆட்சி மாற்றத்தை கேட்டார்கள். அனைவரையும் இணைத்து அரசியலில் மாற்றங்களை கொண்டு வருவேன். அஹிம்சை வழியில் இடம்பெற்று வந்த போராட்டங்கள் மெதுவாக திசை மாறின. அஹிம்சை வழியில் போராடுபவர்களை நான் ஒரு போதும் தொடமாட்டேன்.

அவ்வாறு போராடுபவர்கள் மீது ஏதேனும் நடந்தால் அவர்கள் உடனே அது தொடர்பாக புகார் கொடுக்கலாம். எரிபொருள் வரிசையில் குழப்பங்களை ஏற்படுத்தும் பாதாளக்குழுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அநாவசியமாக தேவையற்ற இடங்களில் கூடுவதை தடுக்கவும். உங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் கூடுங்கள். அமைதியாக போராடும் போராட்டத்தில் குழப்பங்களை ஏற்றப்படுத்த வேண்டாம். நாடாளுமன்றத்துக்குள் இளைஞர்கள் வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இக்கட்டான நிலையில் இருக்கும் போது இந்தியா வழங்கி உதவியையும் ஜனாதிபதி இதன்போது நினைவுகூர்ந்துள்ளார். அத்துடன் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த இலங்கைக்கு உயர்மூச்சு வழங்கிய இந்தியாவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Latest news

சர்வதேச விமான கண்காட்சியில் விபத்துக்குள்ளான விமானம்

விக்டோரியாவில் நடந்த அவலோன் சர்வதேச விமான கண்காட்சியின் போது ஒரு விமான விபத்து ஏற்பட்டுள்ளது. நான்கு விமானங்கள் சம்பவ இடத்திற்கு மேலே பறந்ததைக் கண்டதாகவும், அவற்றில் ஒன்று...

புலம்பெயர்ந்த பொறியாளர்களுக்கு அடித்துள்ள அதிஷ்டம்

ஆஸ்திரேலியாவிற்கு தகுதியான பொறியாளர்கள் தேவை என்று அதிகாரிகள் கூறுகின்றனர். Engineers Australia-வின் செயல் தலைமைப் பொறியாளர் Bernadette Foley, நாட்டில் பல திறமையான புலம்பெயர்ந்த பொறியாளர்கள் இருப்பதாகக்...

இனி கடலோரப் பகுதிகளில் முகாமிட்டால் $200 அபராதம்

மேற்கு ஆஸ்திரேலியாவின் அல்பானி (Albany) நகரில் உள்ள கடலோரப் பகுதியில் முகாமிட்டால் $200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது நகரத்தில் வீட்டுவசதிக்கு மிகவும் விலையுயர்ந்த பகுதிகளில் ஒன்றாகவும், மிகவும்...

அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற விக்டோரியா இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு

விக்டோரியாவில் வசிக்கும் இளைஞர்கள் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். அதன்படி, இளைஞர் கொள்கைகள் மற்றும் சமூக நலனில் பணியாற்ற 10 பேர் கொண்ட குழுவை...

பிரபல கேசினோ நிறுவனத்தின் உரிமம் இடைநிறுத்திய ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் பிரபலமான ஒரு கேசினோ உரிமம் அடுத்த சில மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. New South Wales Independent Casino Commission, The Star-இன் கேசினோ உரிமம்...

மெல்பேர்ண் குடியிருப்பாளர்கள் இப்போது மலிவான விமான டிக்கெட் வாங்கும் வாய்ப்பு

விர்ஜின் ஆஸ்திரேலியா மற்றும் கத்தார் ஏர்வேஸ் இடையேயான அதிகாரப்பூர்வ கூட்டாண்மை நேற்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவிலிருந்து தோஹாவுக்கான விமானங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும். ஆஸ்திரேலிய நுகர்வோர்...