Notices2ஆம் ஆண்டு வாகை விருதுகள் - தென் அவுஸ்திரேலிய தமிழ்ச்சமூகத்தின் கொண்டாட்டம்

2ஆம் ஆண்டு வாகை விருதுகள் – தென் அவுஸ்திரேலிய தமிழ்ச்சமூகத்தின் கொண்டாட்டம்

-

தெற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள தமிழ் மற்றும் பல்லின கலாச்சார சமூகத்தின் வளர்ச்சிக்குப் பணிபுரியும் தமிழ் மக்களின் பங்களிப்புகளையும், சாதனைகளையும் கொண்டாடி மகிழ்வதும், பொதுச் சமூகத்திற்கு அவற்றை எடுத்துச் சொல்வதும் மிகவும் அவசியம்.

நீங்களும் உங்கள் சுற்றத்தாரும் தனிப்பட்ட முறையிலோ, தொழில் சார்ந்தோ அல்லது சமூக அமைப்பின் வழியிலோ தொண்டாற்றியிருக்கலாம், அத்துடன் பல சாதனைகளையும் புரிந்திருக்கலாம்.

உங்கள் பங்களிப்பும் சாதனைகளும் நம் சமூகத்தின் அடையாளம் என்பதை உணர்ந்து, அதை ஆவணப்படுத்தும் விதமாக, வாகை அடிலெயிட் தமிழ் ஒலிபரப்புச் சேவையானது, வாகை – தமிழ் விருதுகள் 2022 என்ற தொடர் நிகழ்வை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது. உங்களை இந் நிகழ்விற்கு ஆவலுடன் வரவேற்பதோடு உங்கள் ஆதரவை அன்புடன் கோருகின்றது.

அதன்படி, நம் சமூகத்தில் சிறப்பாக பங்காற்றி வரும் நமது குழந்தைகள், இளையோர், மகளிர், ஆடவர், மூத்தோர், தொழில் முனைவோர், தமிழ் அமைப்புகள், தமிழ்ப்பள்ளிகள், பொதுச் சமூகத்திற்கு பெரும் பங்களிப்பு செய்த மரணித்தும் நம்முடன் வாழ்ந்து வரும் ஆன்மாக்கள், மற்றும் தமிழ் மக்களுக்கு உதவிவரும் பிற இனங்களைச் சேர்ந்த தனி நபர்கள் மற்றும் பல்லின கலாச்சார அமைப்புகள் ஆகியோரை “வாகை – தமிழ் விருதுகள் 2022”-க்கு பரிந்துரை செய்யுமாறு உங்களுக்கு அழைப்புவிடுக்கிறோம்.

விருதுகளுக்கான பரிந்துரை விண்ணப்பத்தின் கடைசித் திகதி: 24-08-2022
சுய பரிந்துரைகளும் வரவேற்கப்படுகின்றன.

விருதுக்குப் பரிந்துரை செய்ய, கீழுள்ள இணைப்பைச் சொடுக்கவும்:

The objective of Vaagai Festival 2022 is to celebrate not only the Tamil culture but also other cultures in the SA community via promoting their artforms; to recognise and honour members (individuals/families/businesses) of the Tamil community in Adelaide, who have been tirelessly contributing to South Australia in various ways; to also recognise non-Tamil Community Organisations in SA that have been encouraging multiculturalism; and to celebrate the one-year anniversary of Vaagai Adelaide Tamil Broadcasting Service and its tremendous volunteers.

In order to honour and recognise the contributions of Tamils to the South Australian community, Vaagai has come up with the idea of presenting appreciation awards at this community festival. Please use the nomination form found on the link provided to nominate individuals/organisations that you consider are worthy of being recognised for their contributions to SA.

  • CLOSING DATE FOR NOMINATIONS: 25/08/2022

Self-nominations are also welcome.

Please share this information with your friends, members, patrons and stakeholders.

நன்றி | Thank you!

அன்புடன் | Kind regards,
நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு | Event Organising Committee
வாகை விருதுகள் 2022 | Vaagai Awards 2022
vaagaiawards@gmail.com

Latest news

அமெரிக்காவில் TikTok-ஐ மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை

அமெரிக்காவில் முடக்கப்பட்ட உலகின் மிகவும் பிரபலமான சமூக ஊடக செயலியான TikTok ஐ மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அமெரிக்காவில் செயல்படும் TikTok கணக்குகளின் எண்ணிக்கை...

தன் பல கிளைகளை மூட முடிவு செய்துள்ள பிரபல ஆஸ்திரேலிய வங்கி 

குயின்ஸ்லாந்து வங்கி ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள அதன் 14 வங்கிக் கிளைகளை மூட நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, மேற்கு அவுஸ்திரேலியா மாநிலத்தில் 02 வங்கிக் கிளைகளையும், விக்டோரியாவில்...

பிப்ரவரி 1 முதல் அதிகரிக்கும் ஆஸ்திரேலியா விசா வகைக்கான விண்ணப்பக் கட்டணம்

பிப்ரவரி 1ம் திகதி முதல் தற்காலிக பட்டதாரி விசா விண்ணப்பக் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கலாசார மற்றும் பல்கலாச்சார அமைச்சர் டோனி பர்க்...

விக்டோரியா ஓட்டுநர்களுக்கு காத்திருக்கும் பல நிவாரணங்கள்

விக்டோரியா மாநில அரசு எரிபொருள் விலை உயர்வுக்கான வரம்பை அறிவித்துள்ளது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. தொழிற்கட்சியின் "Fair Fuel Plan"-ஐ 20ம் திகதி...

விக்டோரியாவில் சிறுவர் குற்றவாளிகளை தேட பொதுமக்கள் உதவியை நாடும் காவல்துறை

விக்டோரியாவில் கத்திக்குத்துச் சம்பவத்தில் ஈடுபட்ட 10 பேரைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை போலீஸார் கோரியுள்ளனர். விக்டோரியாவில் திருவிழா ஒன்றில் 18 வயது இளைஞரை கத்தியால் குத்தியதாக அவர்கள்...

ஆஸ்திரேலியாவின் ஒரு மாநிலத்திற்கு சூறாவளி மற்றும் நில அதிர்வு அபாயம்

மேற்கு அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள வெப்பமண்டல சூறாவளி நிலை இன்று வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மேற்கு ஆஸ்திரேலியாவின் மெக்கரிங் பகுதியில் 3.8...