News இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் குறையும் பஸ் கட்டணம்

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் குறையும் பஸ் கட்டணம்

-

சாதாரண பஸ் கட்டணம் இன்று (04) நள்ளிரவு முதல் 11.14 வீதத்தால் குறைக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, குறைந்தபட்ச பஸ் கட்டணம் 38 ரூபாவிலிருந்து 34 ரூபா வரை குறைக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து சபையின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா குறிப்பிட்டார்.

பஸ் கட்டண குறைப்பிற்கு போக்குவரத்து அமைச்சின் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

COVID காலப்பகுதியில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய மாத்திரம் பயணிகள் ஏற்றிச்செல்லப்பட்டமையால், 20% பஸ் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் தற்போது வழமை போல் அதிகளவான பயணிகள் ஏற்றிச்செல்லப்படுவதால், சாதாரண பஸ் கட்டணத்தை குறைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, ஆகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து டீசல் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விடயங்களை ஆராய்ந்து, உள்ளக மற்றும் வௌி மாவட்டங்களுக்கான சாதாரண பஸ் போக்குவரத்து கட்டணம் இன்று நள்ளிரவு முதல் 11.14 வீதத்தால் குறைக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து சபையின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா சுட்டிக்காட்டினார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் உள்ள McDonald’s உணவகங்களில் கவுண்டர்களுக்கு முன்னால் ஒரு பிளாஸ்டிக் கவர்

அவுஸ்திரேலியாவில், துரித உணவு உணவக சங்கிலி அதன் உணவகங்களின் கவுன்டர்களுக்கு முன்னால் பிளாஸ்டிக் கவரைப் பயன்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

குயின்ஸ்லாந்து பொது போக்குவரத்து சேவைகளில் பெரிய மாற்றம்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பயணிகள் போக்குவரத்து பேருந்து சேவைகளுக்கான கட்டண முறையை எளிமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன்,...

பல தசாப்தங்களுக்குப் பிறகு, ரிசர்வ் வங்கிக்கு இன்று திருத்த அறிக்கை

ஆஸ்திரேலியாவின் பெடரல் ரிசர்வ் வங்கியில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சீர்திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் இன்று பெற உள்ளார்.

கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு 3 வருட சிறைத்தண்டனை

கடந்த ஆகஸ்ட் மாதம் கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.