கமல் ஹாசனின் இந்தியன் 2-வில் தீபிகா படுகோன்?

0
334

உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கரின் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க ஆவலுடன் காத்திருப்பதாக ஏற்கனவே சொல்லப்பட்டது. படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து, இயக்குநர் ஷங்கருக்கும் தயாரிப்பாளருக்குமிடையேயான மோதல், கோவிட் 19 போன்ற காரணங்களால் இந்தியன் 2 படப்பிடிப்பு தாமதப்பட்டிருக்கிறது.

இந்தப் படத்தில் நடிகை காஜல் அகர்வால் கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கவிருந்தது நமக்கு தெரிந்ததே. ஆனால் அவர் திருமணம் செய்துகொண்டு கடந்த ஏப்ரல் மாதம் ஒரு ஆண் குழந்தைக்கு தாயானார். ஆகவே காஜல் அகர்வால் இந்தியன் 2 படத்தில் இருந்து மாற்றப்பட வாய்ப்புள்ள நிலையில், பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் படத்தில் இருந்து காஜல் அகர்வால் மாற்றப்படுவது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

இயக்குனர் ஷங்கரும் மறைந்த நடிகர் விவேக்கிற்கு மாற்று நடிகரை தேடி வருவதாகத் தெரிகிறது. ‘இந்தியன் 2’ படத்தில் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் ஆகியோரும் நடிக்கின்றனர். மூத்த நடிகர் டெல்லி கணேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தியன் 2 படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.ராம் சரணுடன் ‘RC15’ படத்தை, ஷங்கர் முடித்த பிறகு, கமல்ஹாசன் – ஷங்கர் இணைந்து ‘இந்தியன் 2’ படத்தில் பணிபுரிவார்கள் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் இறுதியில் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க குழு திட்டமிட்டுள்ளது.