தைவான் விவகாரம்…சீனாவுக்கு ரணில் விக்ரமசிங்கே ஆதரவு

0
391

சீனா சொந்தம் கொண்டாடி வரும் தைவானுக்கு சீனாவின் எதிர்ப்பை மீறி அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி சென்றார். தைவான் அதிபர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து பேசினார். இந்நிலையில், இதுகுறித்து இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:- இலங்கைக்கான அமெரிக்க தூதர் கி சென்ஹாங் என்னை சந்தித்தார். அவரிடம், ‘ஒரே சீனா’ கொள்கையையும், நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு குறித்த ஐ.நா. சாசனத்தையும் இலங்கை ஆதரிப்பதாக தெரிவித்தேன். தற்போதைய உலகளாவிய பதற்றத்தை மேலும் தூண்டும்வகையிலான செயல்பாடுகளை நாடுகள் தவிர்க்க வேண்டும். பரஸ்பர மரியாதையும், பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் அமைதியான ஒத்துழைப்புக்கு முக்கியமான அடித்தளம் ஆகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Previous articleகென்யா தேர்தலில் ருசிகரம்: ஓட்டுக்காக பொதுக்கழிவறைகளை சுத்தம் செய்யும் வேட்பாளர்கள்
Next articleகமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் அப்டேட்டை வெளியிட்ட காஜல் அகர்வால்