கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் அப்டேட்டை வெளியிட்ட காஜல் அகர்வால்

0
230

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார் நடிகை காஜல் அகர்வால். படத்தில் இடம்பெறுவதை உறுதி செய்த காஜல், படப்பிடிப்பு தொடங்கும் தேதியையும் கூறியுள்ளார்.இந்தியன் 2 படத்தில் முக்கிய கேரக்டரில் காஜல் அகர்வால் இடம்பெறுவார் என அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. சில காரணங்களால் இந்தியன் 2 படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.இடையே, காஜல் கர்ப்பம் அடைந்ததால் அவர் படத்தில் தொடர்வாரா என்ற கேள்வி எழுந்தது.

காஜலுக்கு பதிலாக தீபிகா படுகோனே இந்தியன் 2 படத்தில் இடம்பெறுவார் என தகவல்கள் பரவியது. இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் இடம்பெறுவதை காஜல் உறுதி செய்துள்ளார்.இன்ஸ்டாகிராம் லைவில் பேசிய காஜல் செப்டம்பர் 13ம்தேதி படப்பிடிப்பு தொடங்கும் என்ற அப்டேட்டையும் வெளியிட்டுள்ளார்.காஜலின் அறிவிப்பு அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.திருமணத்திற்கு பின்னரும் காஜல் தொடர்ந்து நடிக்கவுள்ளதால் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.