ஹாலிவுட் படத்தில் மீண்டும் இடம்பெறுகிறார் தனுஷ்

0
199

கோலிவுட், பாலிவுட் சினிமாவில் கலக்கிய நடிகர் தனுஷ், தி கிரே மேன் படத்தின் மூலம் ஹாலிவுட்டில் என்ட்ரி ஆகியுள்ளார். அதிலும் ஹாலிவுட்டில் முன்னணி இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களாக இருக்கும் ரூஸோ பிரதர்ஸின் இயக்கத்தில் நடித்திருக்கிறார் தனுஷ்.ரூசோ பிரதர்ஸ், உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் மார்வெல் சினிமாட்டிக் யூனிவர்ஸ் படங்களை இயக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர்களது இயக்கத்தில் தி கிரே மேன் திரைப்படம், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த மாதம் 22ஆம் தேதி வெளியானது. உலகம் முழுவதும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தி கிரே மேன் படத்தில் தனுஷ் இடம்பெறும் காட்சிகள், ஹாலிவுட்டிலும் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. ஆவிக் சன் என்ற அதிரடியான கேரக்டரில் தனுஷ் நடித்திருக்கிறார்.தனுஷ் வரும் காட்சிகள் அனைத்தும் ஆக்சன் நிறைந்ததாகவே இருந்தன. தி லோன் ஓல்ஃப், என்ற புனைப் பெயருடன் தனுஷ் திரைப்படத்தில் அழைக்கப்பட்டிருந்தார்.

தனுஷின் நடிப்பை ரூசோ பிரதர்ஸ் பல்வேறு நாடுகளில் புகழ்ந்து பேசி இருந்தார்கள். இந்நிலையில் தி கிரே மேன் படத்தின் அடுத்த பாகம் உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பான அறிவிப்பை தனுஷ் இன்று வெளியிட்டுள்ளார். இந்த படத்திலும் தனுஷுக்கு அதே கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இதனால், இரண்டாம் பாகத்தில் அவருக்கான காட்சிகள் அதிகம் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.இந்த படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டு வாய்ஸ் வீடியோ ஒன்றையும் தனுஷ் பதிவிட்டிருக்கிறார். இந்தக் குரலானது, தி கிரே மேன் படத்தின் 2ம் பாகத்தில் இடம்பெறும் காட்சிக்குரியது என்பதுதான் இங்கு ஹைலைட். இதனை ரசிகர்கள் அதிக எண்ணிக்கையில் ஷேர் செய்து வருகின்றனர்.