News ஜனாதிபதி ரணிலின் விசேட அறிவிப்பு

ஜனாதிபதி ரணிலின் விசேட அறிவிப்பு

-

சர்வகட்சி அரசாங்கத்திற்கான அரசியல் கட்சிகளுடனான கலந்துரையாடலின் போது ஒவ்வொரு தரப்பினரும் முன்வைத்த யோசனைகள் பங்குபற்றிய அனைத்து கட்சிகளுடனும் பகிர்ந்து கொள்ளப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் (08) முன்மொழிவுகள் வழங்கப்படும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, போராட்டத்தின் உண்மையான மக்களின் எதிர்பார்ப்பை வென்றெடுப்பதற்கு, அதன் மோசமான அம்சங்களைக் களைந்து, நல்ல இலக்குகளுடன் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கான பிரேரணை தொடர்பில் தென்னிலங்கையின் பிரதம சங்கநாயக்கர் வணக்கத்திற்குரிய கலாநிதி ஓமல்பே சோபித தேரர் உள்ளிட்ட மக்கள் பேரவையில் நேற்று (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பல அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களுடன் சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை மீளக் கொண்டுவருவது மற்றும் நாட்டில் மேற்கொள்ளப்படவுள்ள பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பிலும் இதன்போது நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட சில கட்சிகளுடன் மாத்திரமே இன்னும் கலந்துரையாடல்கள் உள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest news

6 ஆண்டுகளாக ஊழியர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கியதற்காக UNSW க்கு எதிரான விசாரணை

ஃபேர்வொர்க் ஒம்புட்ஸ்மேன் அலுவலகம், நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் அல்லது யுஎன்எஸ்டபிள்யூ, ஊதியம் வழங்கப்படாத குற்றச்சாட்டுகளுக்கு எதிராக விசாரணையைத் தொடங்கியுள்ளது.

BREAKING: டேனியல் ஆண்ட்ரூஸ் விக்டோரியாவின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்

விக்டோரியாவின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய டேனியல் ஆண்ட்ரூஸ் முடிவு செய்துள்ளார். இதன்படி, நாளை பிற்பகல் 05.00 மணி...

விக்டோரியர்கள் செலுத்த வேண்டிய மீதமுள்ள அபராதம் $850 மில்லியன்

விக்டோரியர்கள் செலுத்த வேண்டிய அபராதத் தொகை 850 மில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் $353 மில்லியன் அதிவேகத்துடன்...

உலகிலேயே தூய்மையான காற்று இங்கு மட்டுமே கிடைக்கும்!

சுத்தமான காற்று, நல்ல குடிநீர், ஆரோக்கியமான உணவு மற்றும் வசிப்பதற்கு இருப்பிடம் ஆகியவைதான் மனிதனின் முதல் தேவைகள் ஆகும்.

உலகிலேயே தூய்மையான காற்று இங்கு மட்டுமே கிடைக்கும்!

சுத்தமான காற்று, நல்ல குடிநீர், ஆரோக்கியமான உணவு மற்றும் வசிப்பதற்கு இருப்பிடம் ஆகியவைதான் மனிதனின் முதல் தேவைகள் ஆகும்.

வகுப்பறைக்குள் அரசியலை கொண்டு வந்ததாக 2 விக்டோரியா பாடசாலைகளுக்கு எதிராக முறைப்பாடுகள்

சுதேசி குரல் வாக்கெடுப்பு தொடர்பில் வகுப்பறைகளுக்குள் அரசியலை கொண்டு வந்தமைக்காக விக்டோரியா மாநிலத்தில் உள்ள 02 பாடசாலைகளுக்கு எதிராக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.