ஆஸ்திரேலியா விக்டோரியா மாகாணத்தின் முதல்வர் டேனியல் ஆன்ட்ருஸ் தனது அரசின் அறிவிப்பு ஒன்றை தமிழில் வெளியிட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த பதிவை பகிர்ந்துள்ள இணையவாசி ஒருவர், பகிர்ந்துள்ளார். ஆஸ்திரேலியா கூட தமிழின் பெருமையை உணர்ந்து அறிக்கையை தமிழில் வெளியிடுகிறது.
ஆனால் இந்திய ஒன்றியம் மட்டுமே தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக பார்க்கிறது என பகிர்ந்தவர் கூறியுள்ளார்.
“இந்த மாதத்திலிருந்து, ஒவ்வொரு விக்டோரியன் குடும்பமும் $250 பெறலாம்.
நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் எங்கள் விக்டோரியன் எனர்ஜி ஒப்பீடு இணையதளத்தைப் பயன்படுத்தி மின்சாரத்திற்கான மலிவான விலையைக் கண்டறிவதே .
நீங்கள் பயன்படுத்தும் நிறுவனத்தை மாற்ற வேண்டிய அவசியமில்லை.
வேறொரு நிறுவனத்தின் மலிவான மின்சார விலையைப் பெற முடியுமா என்பதைச் சரிபார்க்க நீங்கள் இந்த இணையதளத்தைப் பயன்படுத்த வேண்டும்.
விக்டோரியா எனர்ஜி ஒப்பீடு இணையதளத்தைப் பயன்படுத்தும் பெரும்பாலான விக்டோரியர்களால் மின்சாரத்திற்கான மலிவான விலைகளைக் கண்டறிய முடிகிறது.
இதனால் நீங்கள் அதிக பணத்தை சேமிக்க முடியும்.
இப்போதே இணையதளத்திற்குச் சென்று சேமிக்கத் தொடங்குங்கள்: compare.energy.vic.gov.au ” என விக்டோரியா மாகாணத்தின் முதல்வர் டேனியல் ஆன்ட்ருஸ் குறிப்பிட்டுள்ளார்.